129
 

அச் சிவனை அவன் திருவருளால் அகக்கண் கொண்டு உணர்வினில் குறித்தல் வேண்டும். அகக்கண் - அறிவுக்கண். அவன் மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன். தேக்கிடுதல் - நிறைவுறுதல். செறிவால் - ஐம்புலத் தொடர்பால்.

(அ. சி.) குறியறியாதது ஒன்று - சுட்டி அறியப்படாத சிவம்.

(7)

294. உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு1 கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை2 தானே.

(ப. இ.) ஆருயிர் உய்வதற்கு நேரிய பெருந்துணையாவது மக்களுடம்பேயாம். மேலும் உயர்ந்தோர் எனக்கொள்ளப்படும் உலகோர் திருவடியுணர்வால் கூறும் ஒற்கத்தின் ஊற்றாந்துணையாகிய நற்கேள்வி உயிர்க்கு உறுதுணையாகும். நற்கேள்வி - சிவனடியே சிந்திக்கச் செய்யும் திருப்பெருகு சிவஞானம். நம்மைவிட்டகலாது ஒட்டியுறைவதாகிய செறிதுணை சிவனடி மறவாச் சிந்தையேயாம். அதனால் பெறப்படும் அளவில் பேற்றினைக் கேட்பின் பிறப்பற்றுச் சிறப்புற்று இறப்பில் பேரின்பம் உறப்பெற்று என்றும் ஒன்றுபோல் பிரிவின்றி நின்று வாழ்வதாம். 'உலகம் உயர்ந்தோர் மாட்டு' என்பதனை வரும் தொல்காப்பிய நூற்பாவான் உணர்க:

வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி யவர்கட் டாக லான.

தொல். பொருள் - 647.

(அ. சி.) உலகுறுகேள்வி - உயர்ந்தோரிடம் கேட்டறியும் ஞானம்.

(8)

295. புகழநின் றார்க்கும் புராணம்எம் ஈசன்
இகழநின் றார்க்கும்3 இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

(ப. இ.) அறஞ்சொல்லும் நல்லார் புகழ அவரோடு உடனின்று அவரைத் திருவடியன்பிற் கலப்பித்து நிறைந்து நிற்கும் தொன்மைத் திருஅருட் செல்வன் சிவபெருமான். இவ்வுண்மை உணராது புறக்கணித்துச் சிலர் இகழ அவர் நல்வழிப்படுதற் பொருட்டு அவர்க்கு இடும்பைகளை நல்கி அவற்றோடு பிணிப்பிப்பவனும் நன்மைச் சிவனே.' 'ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டு இறுமாந்திருக்கும்' பெருமகிழ்வு கொண்டு திருவருளால் அச் சிவனை ஓதியுணரும் உண்மைநெறி நில்லாது அந் நெறிக்கு விலக்காகி நின்றார்க்குத் துன்பமே யன்றி இன்பம் உண்


1. உலகத்தா. திருக்குறள், 850.

2. குறவிதோள். அப்பர், 4. 60 - 3.

3. நல்லார். சம்பந்தர், 1. 84 - 10.