464
 

(ப. இ.) திருவருள் ஆருயிர்களைவிட்டுப் பிரியாதுநிற்கும் பெருந்தகை அம்மை. பேதை - இரக்கமுள்ள தாய். அகவழிபாடு செய்யும் அன்பர்கள் குறிக்கும் குறிப்பில் பொருந்திநிற்கும் இளமையும் அழகும் மென்மையும் வாய்ந்த கோமளக்கொம்பும் அவளே. அறிகருவியுடன் ஒத்துநின்று அவற்றைத் தொழிற்படுத்தி ஆருயிர்கட்கு உயிர்க்குயிராய் நின்று அவ் வுயிர்களின் அறிவுக்கு அறிவாயிருப்பவளும் அவளே.

(28)

1159. உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்தே.1

(ப. இ.) திருவருள் உயிர்க்குயிராய் உள்நின்று உடனாய் ஐம்புல வேடரின் கள்ளத்தைக் குருவாய் வந்து உண்மையுணர்த்தி நீக்கினள். அவளே பிரிப்பின்றி ஒன்றாய்க் கலந்து பொருந்தி, சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் நற்றவம் நான்கினையும் கொள்ளுவித்து, அதனால் பெருகிய இன்பத்தைப் பெறுவித்து வள்ளல் தலைவியுமாயினள். இச்செயல் அனைத்தும் வியப்புடைய செயலாகும். மருட்சி - வியப்பு.

(அ. சி.) வள்ளற்றலைவி - உயிர் வருக்கங்களுக்குக் கைம்மாறு கருதாமல் நல்லறிவினை ஊட்டும் வள்ளற்றன்மை வாய்ந்த திருவருட்சத்தி.

(29)

1160. புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி இருந்த புதல்விபூ வண்ணத்
திருந்த விலக்கில் இனிதிருந் தாளே2

(ப. இ.) ஆருயிர்களுக்கு அகமிருந்து வாழ்வாகிய போகத்தை அருளும் பேரறிவாற்றல் அம்மையாவள். உணர்வில் தங்கி ஒப்பிலா இன்பம் ஊட்டும் இவ் உண்மையைச் சிலரறியார். உயிர்தொறும் அமைந்துவிளங்கும் அம்மை செந்தாமரை வண்ணத் திருமேனியையுடையவள். ஆருயிர்களை ஈடேற்றும் குறிப்புடன் பேரளிபூண்டு இனி திருந்தனள்.

(அ. சி.) பூவ...இலக்கி - செந்தாமரை ஆசனத்தி.

(30)

1161. இருந்தனள் ஏந்திழை என்னுள மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நிரதி சயமொடு
பொருந்த விலக்கிற் புணர்ச்சி அதுவே.

(ப. இ.) அடியேன் உள்ளத்தைப் பொருந்தித் திருவருள் அம்மை இருந்தனள். நாமெல்லாம் ஆண்டவன் திருவடிப் பேரின்பமாகிய எல்லையில்லாத வியத்தகு இன்பத்தைப் பெற்று என்றும் ஒன்றுபோல் வாழச்


1. ஐம்புல. சிவஞானபோதம். 8.

2. போகமார்த்த. சம்பந்தர் - 1.