783
 

தறியில் அணைகின்றில. ஈண்டுச் சிவபெருமானைக் கட்டுத்தறியாக உருவகித்தனர் அவற்றின்வழியே சென்று அவற்றைவழியே சென்ற அவற்றைக் கைக்கொண்டுள்ள பாகராகிய ஆருயிர்களும் இளைத்தன. அக் களிறுகளும் அலைந்து அலைந்து எய்த்தன. இந்நிலையில் சிவபெருமான் திருவருளால் அகத்தவமாகிய யோகுதிருந்துதல் என்னும் பொருந்துநிலையொன்று ஏற்பட்டது. அதுவே அப் புலன்களாகிய யானைகளைக் கட்டுத்தறியாகிய சிவத்தின் பால் அணைத்தலாகும். இஃதல்லாது வேறொன்றும் யாம் அறியோம் என்க. மேலும் 1995இல் ஓதும் அஞ்சும் அடக்கும் முறைமையும் இதுவேயாம்.

(அ. சி.) ஆகமதத்தன - மதத்தன ஆக. ஆகமதத்து - உன்மத்தமாக. தறி - சிவன். பாகன் - ஆன்மா.

(1)

1986. கருத்தினன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன்
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா
எருத்துற வேறி யிருக்கிலு மாங்கே
வருத்தினும் அம்மா வழிநட 1வாதே.

(ப. இ.) ஆருயிர்களின் ஐம்புலன்களை மதமாவாக உருவகிப்பது போல் மனத்தைத் தேராகவும் உயிர்ப்பைப் பாய்மாவாகவும் உருவகிப்பர். உயிர்ப்புப் பயிற்சியினை உரைக்கும் திருமந்திர முதலிய தமிழாகமங்களை நன்கு கற்று அப் பாய்மாவினைச் செலுத்துமுறையாகிய அகத்தவப் பயிற்சியில் ஆருயிர் முயலுதல் வேண்டும். அவ்வுயிர்ப்பாகிய பாய்மாவும் முதற்கண் வருத்தமுற்றன்றித் திருத்தமுறா. இம் முறையானன்றி அப் பாவமாவாகிய உயிர்ப்பினை எருத்தத்து ஏறி இருப்பினும், வருத்தி வழி நடத்தினும் அம்மா வழி நடவாதென்க. இது முறையறியாது யோகம் பயில்வார் உயிர்ப்பினை மடுத்தலும் விடுத்தலும் ஒடுக்கலும் செய்து நன்மை எய்தாது தீமை எய்தித் துன்புறுவார் நிலையினைக் குறிப்பிப்பதாகும். பாய்மா - குதிரை. அம்மா - அக் குதிரை. இதனை யானையாகவே கொண்டு பொருள் கூறுதலு மொன்று. யானையாகக் கூறுங்கால் பாய்மா - மதம் பாய்கின்ற மா எனக் கூறுக. யோகப்பயிற்சியின்றி ஐம்புலன்களை அடக்குவது முடியாததொன்று. அவ்வியானைகளும் வருத்தமுறாமல் வழிக்கு வருவதில்லை. அதன்எருத்தத்து ஏறியிருப்பினும் வருந்திச் செலுத்தினும் வழிநடவாதென்க. எருத்தம்; கழுத்து; பிடர்; ஈண்டு முதுகின்மேற்று.

(அ. சி.) கால் கொத்தி - பிராணவாயுவை அடக்கி. திகைத்தன்றி - வருத்தப்பட்டல்லாமல். அம்மா - அந்த இந்திரியங்களாய யானைகள்.

(2)

1987. புலமைந்து புள்ளைந்து புட்சென்று மேயும்
நிலமைந்து நீரைந்து நீர்மையும் ஐந்து
குலமொன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி யொன்பது2 தானே.


1. நண்ணனல். சிவஞானபோதம், 10. 2 - 4.

2. மூக்கு. அப்பர், 5. 47 - 7.

" உரைமாண்ட, 8. திருத்தோணோக்கம், 14.

" புலனைந்து, திருவாய்மொழி, 2. 8 - 4.