நிலைநாட்டத் திருவடியுணர்வு கைகூடும். அது கைகூடவே சிவபெருமான் திருவடியின்பம் எய்தும். (5) 2531. நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப் பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத் தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. (ப. இ.) நனவு கனவு உறக்கம் பேருறக்கம் உயிர்ப்படங்கல் ஐந்தையும் நாதமாகிய ஒலியின் முடியில் தங்கவைத்துவிடுக. அதன்பின் வேறுபாடுற்று நீங்கியமலத்தையும் வைத்திடுக. அதன்பின்பு உண்மையுணர்தலாகிய சுத்த நிலையதாம் சிவனிலை வாய்க்கும். ஒலியாகிய நாதமுடிவின்கண் செயலற்று ஒடுங்குநிலை சாந்த நிலையாகும். அந் நிலையின் நின்று மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவபெருமான் ஆதலின் அவனை நாதமுடிவில் வைத்து நாடுக. நாடுதல் - சிந்தித்தல். (அ. சி.) பினமாம்-பின்னமாகிய. மனவாசகம் - மனமும் வாக்கும். (6) 2532. பூரணி யாது புறம்பொன்றி லாமையின் பேரணி யாதது பேச்சொன்றி லாமையில் ஓரணை யாதது வொன்றுமி லாமையில் காரண மின்றியே காட்டுந் 1தகைமைத்தே. (ப. இ.) ஒப்பில் ஒரு பொருளாம் சிவம் தனக்கும் புறம்பாக வேறொன்றிலாமையால் எல்லாவற்றையும் உள்ளடக்கி நிற்கின்ற இயற்கை அகல் பரப்பினையுடையது. மேலும் பாலனாய் வளர்ந்திராத முழு வளர்ச்சிப்பான்மையினையுடையது. இவற்றால் அது புதுநிறைவோ புது வளர்ச்சியோ கொள்வதில்லை. யாதலால் பூரணியாதது என்றருளினர். அச் சிவம் பேச் சிறந்தது ஒன்றாகலின் ஒரு பேரும் அணியாததாகும். இயல்பாகவே பாசங்களினின்றும் நீங் கினமையால் எவ் வகைத் தொடக்கும் இல்லாததாகையால் அஃது எத்தகையார் நினைவாகிய ஓர்வுக்கும் அப்பாற்பட்டது. தன்னைக் காட்டுதற்குத் தனக்குமேலொரு காரணமின்றித் தானே காரணமாய் ஆருயிரின் செவ்வி நோக்கி வெளிப்பட்டருள்வன். அத்தகைய இயல்பு வாய்ந்தவன் சிவன். (அ. சி.) பூரணி - வளர்ச்சி. பேர் - ஊர் பேர் முதலியன. ஓர் - ஒன்றை. காட்டும் - வெளிப்படும். (7) 2533. நீயது வானா யெனநின்ற பேருரை ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி 2யாகுமே.
1. பாலனாய். அப்பர், 6. 33 - 5. 2. கண்டவிவை. சிவஞானசித்தியார், 9. 3 - 1.
|