1106
 

நீங்காப் பெரு விழைவு கொள்ளும் மோகாண்டமும், நுகர்வுக்குக் கருவியாம் தேகாண்டமும், நுகர்வின்மேன் மிகு விழைவாகிய வேட்கை கொள்ளும் தாகாண்டமும் என்பன. இவ் வண்டங்கள் அனைத்தையும் ஐம்பெரும் தொழிலால் ஆண்டுகொண்டருள்பவன் சிவன். அவனே முழுமுதல்வன். அவன் திருவடிக்கண் வேறற ஒற்றித்து நிற்பதே பிரமாண்டம் என்ப. பிரமாண்டம் - பெரும்பேருலகம்; சிவனார் - திருவண்டம்.

(அ. சி.) பூதாண்ட பேதாண்ட - ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட மாறுபட்ட வெவ்வேறு பல ஆயிர அண்டங்களும்.

(5)

2683. வேதங்க ளாட மிகுஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளரண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவன முழுதாட
நாதங்கொண் டாடினான் ஞானானந் 1தக்கூத்தே.

(ப. இ.) வேதங்களாகிய மறைநூல்கள் தொழிற்பட என்பதே ஆட என்பதன் பொருளாகும். தொழிற்படுதலாவது உலகோர் ஓதியும் ஓதுவித்தும் அதன்படி ஒழுகலாற்றில் மேற்கொண்டொழுகி உய்யத் துணை நிற்பது. ஆடுதல் - பயன் கொள்ளுதல். உலகவொழுக்கினும் உயர்ந்தது சிவ வொழுக்கம் அதனால் மிகு ஆகமம் ஆட என்றருளினர். ஆகமம் - இறைநூல் வேதத்தை நெறி நூல் எனவும், ஆகமத்தைத் துறைநூல் எனவுங் கூறுப. கீதங்களாகிய பண் நூற்கள் ஆட, விளக்கமிகச் சொல்லப் பெறும் ஏழு அண்டங்களும் ஆட, ஐம்பெரும் பூதங்களும் ஆட, இருநூற்று இருபத்து நான்கு என்னும் எண்ணுட்பட்ட உலகங்கள் முழுவதும் ஆட முப்பத்தாறாம் மெய்யாகிய நாததத்துவத்தை இடனாகக் கொண்டு சிவபெருமான் திருக்கூத்தாடுகின்றனன். அத் திருக்கூத்தே உண்மையறிவின்ப ஒருபெருங் கூத்தாகும். ஆடுதல் - தொழிற்படுதல்; புடைபெயர்தல்.

(அ. சி.) வேதங்கள் ஐந்தில் - அறம், பொருள், இன்பம், வீடு என நான்கும் ஆகம நூல்களும் சேர்ந்து. ஐந்து ஓதுங் கலை....சித்தனே - பேசப்படுகின்ற கலை, காலம், ஊழி, அண்டம், போதம் ஆக ஐந்திலும் ஆடும் சித்தன்.

(6)

2684. பூதங்கள் ஐந்திற் பொறியிற் புலனைந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகுமா கமந்தன்னில்
ஓதுங் கலைகாலம் ஊழி யுடன்அண்டப்
போதங்கள் ஐந்திற் புணர்ந்தாடுஞ் சித்தனே.

(ப. இ.) புலன்நுகர்வினுக்கு இடமாகக் காணப்படும் ஐம்பெரும் பூதங்களிலும், புலனைக் கொள்ளும் ஐம்பொறிகளிலும், அப் பொறிகட்குப்


1. மண்முதல். சிவஞானபோதம், 9. 3 - 3.

" அவனன்றி. தாயுமானவர், 10. எங்குநிறை, 1.

" ஆட்டுவித்தால். அப்பர், 6. 95 - 3.

" ஆடுவாய். " 6. 25 - 3.

" கூடுமா. 12. காரைக்காலம்மையார், 61.