273
 

(அ. சி.) முகட்டலகுச்சி - புருவமத்தி. நாலுவாசல் - கண், மூக்கு, செவி, வாய் நான்கு வாசல்களும் கூடும் இடம். மேலைவாசல் - நாற்சந்திக்கு மேலுள்ள வாசல்.

(5)

603. மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

(ப. இ.) மண்டலம் ஐந்து, வரைகள் பன்னிரண்டு இவற்றை இடமாகக்கொண்டு நிற்கும் தெய்வங்கள் குடிகள் எனப்படும். அவர்களும் அறுவரும் எண்மரும் ஆவர். இவற்றைக் கண்டிட நிற்கும் கருத்துள்ளாகத் திருவடியின்பம் உண்டு நிலாவும். பதநிலைகளை விலக்கிவிடும். மண்டலம் ஐந்து - நிலம், நீர், தீ, காற்று, வானம் என மண்டலங்கள் ஐந்து. இவற்றிற்கு முறையே மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு என்பன நிலைக்களங்கள். வரைகள் மூலமுதற் கூறப்படும், பன்னிரண்டு இடங்கள். ஆறு - நிலைக்களத் தெய்வங்கள் அறுவர்: பிள்ளையார், அயன், அரி, அரன், ஆண்டவன், அன்னையத்தன். அன்னையத்தன் - சதாசிவன். எண்மர்: மண்டலத்தெய்வங்கள். ஐவர்: ஞாயிறு, திங்கள், ஆற்றல்கள், மண்டலத்தெய்வங்கள் அயன், அரி, அரன், ஆண்டவன், அன்னையத்தன்.

(அ. சி.) வளைகள் - இடங்கள். குடிகள் - அதிதேவதைகள்.

(6)

604. பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.

(ப. இ.) உடம்பகத்துப் பூட்டப்பெற்றதொத்து அடக்கப்பட்ட உயிர்ப்பை மேற்செல்லவொட்டாது கொப்பூழின்கண் அடக்கிவைத்தல் வேண்டும். எண்ணத்தை அதன்கண்ணே செலுத்திக்கொண்டிருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழம்போல் (2922) இனிக்கும் திருவருளுடன் ஒற்றுமைப்பட்டிருத்தலுமாகும். தேட்டற்ற - மேற்செல்லுதலற்ற. அந்நிலம் - அந்தப் பேருறக்க இடமாகிய கொப்பூழ் (துரியத்தானம்). (மாம்பழம்: இனிமைபற்றி வந்த உவம ஆகுபெயர்.) நாட்டத்தை - நாடுதலை. மீட்டு - புறஞ்செல்லவொட்டாது அகமுகப்படுத்தி. நயனத்திருப்பார்க்கு - இடையறாது எண்ணியிருப்பார்க்கு. தோட்டத்து - திருவருள் வெளியில். தூங்கல் - உண்டுறைதல்.

(அ. சி.) பொறிப்பட்ட - அடக்கப்பட்ட. மாம்பழம் - சிவக்கனி

(7)

605. உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்1


1. வெற்புறுத்த. அப்பர், 6. 26 - 2.

" பொங்கி. அப்பர், 5. 33 - 6.
துண்ணென். சிலப்பதிகாரம், 12. வேட்டுவவரி.