அன்பர்களின் நெஞ்சத் தாமரையின்கண் அவர்கள் ஆர்வமுடன் செய்யும் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள எழுந்தருளும் அம்மை. வளை - வலம்புரி யோகி - நிறைந்திருப்பவள். புண்டரீகம் - தாமரை (அ. சி.) கண்ட - பொறுக்கி எடுத்த. (11) 1062 .பூசனை கந்தம் புனைமலர் மாகோடி யோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும் வாசமி லாத மணிமந் திரயோகந் தேசந் திகழுந் திரிபுரை காணே. (ப. இ.) வழிபாட்டிற்குவேண்டிய மணப் பொருள்களும், அழகிய மணமுள்ள பூக்களும், சிறந்த புதிய ஆடைகளும், நெடுந்தொலைவுக்குக் கேட்கும் ஐவகையான இயமுழக்கமும், சொல்லுதற்கரிய தலையான திருவெழுத்தைந்தாகிய மந்திரமும் கூடிச் செய்யும் பூசையினை ஏற்றருளும் ஒளி மிகுந்த திரிபுரையாவள். பஞ்சத்தொலி - ஐவகை இயங்களின் ஓசை. இயம் - வாத்தியம். ஐவகையியங்களாவன: தோற்கருவி, தொளைக்கருவி, நரம்புக்கருவி, தாளக்கருவி, மிடற்றுக்கருவி, வாசமிலாத வசமிலாத என்பதன் நீட்டம். மணி - தலையான. யோகம் - கூட்டம். கோடி - புத்தாடை. (அ. சி.) யோசனை - காத தூரம். பஞ்சத்தொலி - மணி, கடல், யானை, வளை, சங்கு ஆகிய ஐந்து ஒலிகள். வாசமில்லாத - சொல்லற்கரிய. தேசம் - ஒளி. (12) 1063 .காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனும் காணுந் தலைவிநற் காரணி காணே. (ப. இ.) உலகத்தில் படைத்தல் காத்தல் துடைத்தல்களின் பொருட்டு அயன் அரி அரன் என்னும் முத்தேவர்களும் அம்மையருளால் தவமுடைய ஆருயிர்களினின்றும் தோன்றுவர். அது பொன்னினின்றும் பல அணிகள் தோன்றுவதையொக்கும். இங்கே அம்மையின் ஆணை பொன்னொக்கும். அதனால் பலபல தெய்வங்கள் என்று கொள்ளற்க. சிவன், பிரமன், மாயன் என்று சொல்லப்படும் முத்தேவர்களுக்கும் காரணமாகிய முதல்வி அம்மையாரும். சிவன் - அரன். பிரமன் - அயன். மாயன் - அரி. (அ. சி.) பூண் - ஆபரணம். (13) 1064 .காரணி மந்திரம் ஓதும் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரணி நந்தி நடுவங் குரைசெய்த ஆரண வேதநூல் அந்தமு மாமே. (ப. இ.) ஆதிமந்திரம் அஞ்செழுத்து என்னும் உண்மையால் அக்
|