1192
 

(அ. சி.) கொட்டியும் ஆம்பலும் - சகல, கேவலம். குளம் - ஆன்மா. எட்டி - வேம்பு; நாமமும் - உருவமும் (விடத்தக்கன ஆதலின்). வாழை - கட்டி, தேன்; சத்து - சித்து, ஆனந்தம். எட்டிப்பழம் எட்டு + இப் பழம் - எளிதிற் சித்திக்கும் இவ் வுலகபோகம். or எட்டிப்பழம் - கண்கவர் வனப்பினதாகிய எட்டிப்பழம் விசத்தன்மையுடையபோல, இன்பம் போலத் தோன்றும் உலக இன்பங்களாகிய துன்பங்கள்.

(36)

2862. பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலமுண் டானுங்
கடைவண்டு தானுண்ணுங் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.

(ப. இ.) ஆருயிர்கள் மல நீக்கத்தின் பொருட்டு அருளால் உடல் கொண்டு உலகிடை உலாவவேண்டிய இன்றியமையாக் கடப்பாடுடையனவாகின்றன. அதன் பொருட்டு உலக அன்னையாகிய பெடைவண்டும் உலக அத்தனாகிய ஆண் வணடும் ஒன்று கலந்து திருவுள்ளக் குறிப்பான் ஏவுதலை மேற்கொள்கின்றனர். அதனால் மாயாகாரியமாகப் பீடிகை வண்ணமாக மண் தோன்றுகின்றது. குடைபோன்று வானம் தோன்றுகின்றது. ஏனையவும் முறையாகத் தோன்றுகின்றன. அவ் வுயிர்கள் வினைக்கீடாக நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பினுள் ஏற்ற கோலஞ்சேர் உடல் கொண்டு பிறக்கின்றன. அதுவே கோலமுண்டான் எனக் கூறப்பட்டது. கடைவண்டு எனப்படும் இழிந்த மனத்தால் வினைக்கீடாக விளையும் இன்பத்துன்பங்களை ஆருயிர்கள் நுகரும். கண்போல் எங்கும் செறிந்து எவற்றினும் நிறைந்து நீக்கமற நிற்கும். திருவருளாற்றல் பெடை வண்டு எனப்பட்டது. அத் திருவருளாற்றலால் அவ் வுயிர்கள் பெற்று நுகர்வது பேரின்பப் பெருவாழ்வேயாம்.

(அ. சி.) பெடைவண்டும் ஆண்வண்டும் - சத்தியும் சிவனும் ஏவ. பீடிகை வண்ணக் குடைகொண்ட - பூமியில் பிறந்த. பாசத்துக் கோலமுண்டான் - சீவன். கடைவண்டு - மனத்தால். தான் உண்ணும் - சுகதுக்கங்களை அனுபவிக்கும். கண்கலந்திட்ட பெடைவண்டு - அருட்சத்தியால்.

(37)

2863. தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குடடத்து நீரிற் குவளை எழுந்தது
விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தி லிட்டதோர் கொம்மட்டி யாகுமே.

(ப. இ.) தட்டத்து நீராகிய வலது மூக்கின்வழி எடுத்தலைச் செய்யும் இரேசக மூச்செனப்படும் தாமரை பூத்துளது. குட்டத்து நீராகிய இடது மூக்கில் விடுத்தலைச் செய்யும் பூரக மூச்செனப்படும் குவளை எழுந்துளது. வலது மூக்கைப் பிங்கலை யென்றும், இடது மூக்கை இடைகலை யென்றும் கூறுப. விட்டமாகிய நடுநாடியினுள் தடுத்தலெனப்படும் கும்பகஞ் செய்து அவ் வுயிர்ப்பினை அருளால் அகத்தே விளங்கிக் காண வல்லார்க்குச் சிவபெருமான் அல்லது திருவடிப்பேறு மிகஎளிதாகக் கிடைக்கும். இடையறாப் பேற்றின் பேரின்பம் எய்துவர். இதற்கு ஒப்பு கொல்லையில் தானாகவே காய்த்து அளவின்றிப் பல்கிக்