1260
 

(அ. சி.) வான் - மேலோர். வழியுற - ஞானயோக வழியேசெல்ல. விம்மிடும் - பூரணம் ஆவர். ஊனறிந்து - உயிர்ச்சாட்சியாகி.

(2)

2984. கடலிடை வாழ்கின்ற கவ்வை யுலகத்து
உடலிடை வாழ்வுகொண் டுள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரை காணலு 1மாமே.

(ப. இ.) ஆருயிர்கள் கடலிடைக் காணும் கலத்து நாப்பண் வாழ்வார் படும் பெரும் துன்பம் போன்று துன்புடனே வாழ்கின்றன. இதுவே உலக வியல்பின் உண்மை. இவ் வுலகில் உடம்பிடை வாழும் ஆருயிர்கள் தம் அறிவு வடிவத் தன்மையை ஆராய்தல் வேண்டும். அங்ஙனம் ஆராயின் அருளால் உயிருக்கு உயிராய் விளங்கும் இயற்கைப் பேரறிவுத் தெய்வமாகிய சிவபெருமானைக் காணுதல் அமையும் அக்காட்சி கடலின் கண்ணுள்ள நீர் தன்பால் தோன்றும் பேரலையைக் காண்பதனோடொக்கும். இதனால் நீரே நீரைக் காண்கின்றதாம் என மயங்கிப் பொருள் ஒன்றென மாறுபடக் கூறுவாருமுளர். அது பொருந்தாது. ஈண்டுக் கடல் என்பது நீருக்கு இடங்கொடுத்து விரவி நிற்கும் வெளி. இது சிவபெருமானுக்கு ஒருபுடையொப்பாகும். நீர் ஆருயிர்கட்கு ஒப்பாகும் நீரின்கண் அலை யெழுந்து தோன்றுமாறு துணை புரியும் காற்று திருவருளுக்கு ஒப்பாகும். அலை ஆருயிர்களின் புடை பெயர்ச்சிக்கு ஒப்பாகும். இந்நான்கு பொருளும் கெடாது. ஒரு பொருளுமாகாது, பின்னிப் புணர்ந்து வேறற நிற்கும் நிலையிற்றான் இக்காட்சி புலனாகின்றது. இதனைத் தெளியவுணர்வரேல் மயங்காரென்க.

(அ. சி.) கவ்வை - துன்பம். உள்ளொளி - ஆன்ம சித்தொளி உள்ளுறு தேவன் - சிவன். கடலின் மலிதிரை - ஓயாமல் வரும் கடல் அலைபோல எப்போதும் தவறாமல்.

(3)

2985. பெருஞ்சுடர் மூன்றிலும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட டிகலிட மெல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்கோரை 2யாமே.

(ப. இ.) ஞாயிறு திங்கள் தீ என்று சொல்லப்படும் பெருஞ்சுடர் மூன்றும சிவபெருமானுக்குரிய எண்பெரும் வடிவங்களைச் சார்ந்தனவாகும். ஏனைய ஐந்தும் முறையே நிலம், நீர், காற்று, விசும்பு, ஆருயிர்கள் என்று சொல்லப்படும். சிவபெருமான் அம் முச்சுடர்களையும் வடிவாகக் கொண்டிருப்பது போன்று அவற்றை ஒளிரச் செய்து அவற்றிற்கு உள்ளொளியாக நிற்பவனும் ஆகின்றான். அவனே தேவர் பிரானுமாவன். உலகிடை எங்கணும் எக்காலத்தும், பிறப்பால், சிறப்பால், பேசும் மொழியால், குறிக்கோளால் ஒருவரோடொருவர் மாறுபடு


1. ஆளென்ப. 11. பட்டினத்துப். கோயில் நான்மணி, 24.

" காண்பானும். வினாவெண்பா, 11.

" நட்புநார், நாலடியார், 12.

2. நோக்காதே. அப்பர், 6. 11 - 5.