38
 

(ப. இ.) பெரிய அகல்போல் காணப்படும் வேள்விக்குண்டமும், அதன்கண் காணப்படும் திரிபோன்ற ஆல் அத்தி முதலிய சுள்ளிகளும் அமைத்துச் சிவபெருமானை முழுமுதலாக் கொண்டு மாறா உறுதியுடன் வேள்வியினைப் புரிய, நெடுநாள் வாழ்தற்கு வேண்டிய கால எல்லையாகிய ஊழியும் பெருகும்; பொருந்த வேண்டிய துன்ப இன்பக் கூறுபாடாகிய இருவினையால் வரும் நோய்கள் பல விழுந்தழியும். அங்ஙனம் அவை விழுவதற்குக் காரணம், சிவ வேள்விப் பயனாக விளைந்த திருவருட்கண் கடைக்கணிக்கும் சூட்டினால் ஏற்படும் சுடுதலேயாம். விழி வீழியென நீண்டு நின்றது. விழுதலைச் செய்தல் என்னும் பொருள் தரும் தொழிற் பெயருமாம். சுள்ளி - பால்மரக்குச்சு.

(அ. சி.) பாழி - பள்ளம், குழி. வீழி செய்து - பார்த்து.

(6)

91. பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
அருஞ் செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணிப்
பருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றாரே.

(ப. இ.) பெருகும் செல்வமாகிய ஏறுவினை பிறவிக்கு வித்தாகிய கேட்டினைத் தருமென்று தன்முனைப்பற்ற அந்தணச் செல்வர்கள் தாங்களாக முற்பிறவிகளிற் செய்துகொண்ட எஞ்சுவினையாகிய சஞ்சிதத்தினின்றும் என்று கொள்ளப்பட்டு, மாறாத ஊழ்வினைச் செல்வம் தந்த தலைவனாகிய சிவனை நல்லார் பலரும் நாடுவர். அவனாலே வரும் திருவடிச் செல்வம், பேரின்பம் தருவதாகும். அது வரவிருந்த வள்ளலை எண்ணிப் புறப் பொருளாய் விளங்கும் பெரிய செல்வங்களைச் சிவஞானங் கிட்டுதற்கு வாயிலாகிய சிவவேள்வியின்பால் பற்றற ஆகுதி செய்வதே மெய் வேள்வி என்க. பருஞ்செல்வம் - தழல்.

(அ. சி.) பெரும்செல்வம் - பெருகும் செல்வம் - அதாவது ஆகாமியம். முன்னே படைத்த அரும் செல்வம் - ஊழ்வினை - வல்வினை. பருஞ் செல்வத் தாகுதி - முத்தி பயக்கும் ஆகுதி.

(7)

92. ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுட ரோமத் தலைவனு1 மாமே.

(ப. இ.) அறவடிவாம் ஒளிமிக்க ஆனேற்றை ஊர்ந்து வரும் தலைமைப்பாடுடைய சிவபெருமானை, என்றும் பொன்றாமையாகிய எவர்க்குமில்லாத ஏர்மிக்க முதல்வனை, பேரறிவுப் பெருஞ்சுடராய் என் உள்ளத்தே. வீற்றிருந்தருளுகின்ற ஒளிப்பொருள்களுக்கு ஒளிகொடுத்தருளும் முச்சுடர்க் கண்ணோனை, முழுமுதல்வன் என்பர். அவன் ஏழு உலகங்


1. அஞ்செழுத்தா. சிவஞானபோதம், 9. 3 - 1.

" நானே. ஆரூரார், 7. 21 - 6.