486
 

1227. பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி
நற்றாள் இறைவனே நற்பய னேஎன்பர்
கற்றான் அறியுங் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.1

(ப. இ.) ஒன்பது திருவாற்றல்களுள் முதன்மை பெற்றவள் மனோன்மனி. அவளே அனைத்துப் பெருமையும் பெற்றவள். அவள் துணையாக இறைவன் நல்ல திருவடியே அழிவிலாத நற்பயன் என்று கூறுவர். கற்றகல்வியின் பயனாகிய கருத்தை யறிவார்கட்கு அவன் திருவடியாகிய விழுப்பேற்றினை எய்துதல் எளிதாகும் - தனிச் சிறப்பாகும்.

(அ. சி.) பொற்றாக உலகம் - முத்தி உலகம்.

(97)

1228. தனிநா யகன்றனோ டென்னெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழுல கென்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியாய் நினைவதென் காரணம் அம்மையே.2

(ப. இ.) குளிரால் மலர்ந்த அழகிய பூக்களைக் கை ஏந்திக் கனிந்த வுள்ளத்துடன் அம்மையின் திருவடியை நினைந்து தொழுங்காரணத்தால் ஒப்பில்லாத முழுமுதல்வனை என்னெஞ்சம் நாடுவதாயிற்று. அதன் பயனாக இனியார் என்னும் பெயர் சிவபெருமானுக்கு எய்துவதாயிற்று. அவ்வினியார் உறையும் உறையுள் ஏழுலகுக்கும் அப்பால் என்பர்.

(அ. சி.) கனியாய் நினைவது - கனிந்து நினைவது.

(98)

1229. அம்மனை அம்மை அரிவை மனோன்மனி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்
இம்மனை செய்த இந்நில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.3

(ப. இ.) உச்சி வீட்டுக்குரிய அம்மை மனோன்மனி என்ப. அவளே செம்பொருள் திருவடியின் உறையுளைச் செய்து திருமங்கையாய்நிற்பள். அவள் இம் மனையாகிய: இவ்வுடலைத் தந்தருளிப் பெருமைமிக்க நிலமடந்தை என்னும் பெயர் பூண்டனள். அவளே அழகிய அன்னையாய் ஆதியாய் யாண்டும் பொருந்திநின்றனள். அவ்வருளம்மை தந்தருளிய ஒரு மனையாகிய ஓருடம்பிலேயே பிறப்பற முயலுதல்வேண்டும். வேறு பிறப் பெடுக்கும் நோக்கங்கொண்டார். பிறன்மனைநோக்கும் பேதையராவர். அவர் 'பிறன்மனை நோக்காத பேராண்மை'யராகாமை பெரிதும் வருந்தத்தக்க தொன்றாகும். மனை - பிறிதுமோருடம்பு.

(அ. சி.) அம்மனை - சகசிர அறை; இம்மனை - இவ்வுடல்.

(99)


1. கற்றதனால். திருக்குறள், 2.

2. கச்சைசே, 4. 66 - 1.

3. துறக்கப். அப்பர், 4. 118 - 8.

" பிறன்மனை. திருக்குறள், 148.