(ப. இ.) நன்னெறி நான்மையால் நன்றான திருவடி உணர்வு வெளிப்படும். நாதங்கடந்து அந் நாதத்தையும் இயக்கும் முழுமுதல்வனாகிய சிவபெருமான் நாதப்பிரான் எனப்படுவன். அவன் அருளும் பரமும் ஆருயிர் செய்யும் அன்புமாய் நின்றருள்கின்றனன். ஆருயிருடன் பிரிவின்றி விரவி ஒன்றாய் மருவியிருக்கும் பருவுடல் நுண்ணுடல் முதலுடன் ஆகியவைகள் ஆருயிர்களைவிட்டு அகலும்படி செவ்விநோக்கிச் சிவகுருவாய்ச் சென்றருளினன். அடியேனைவிட்டுத் தான் யாண்டும் செல்லாமையும் பூண்டருளினன். உபாதி: முதலுடம்பு; காரணவுடம்பு. (அ. சி.) நேயம் - அன்பு. உருவு - தூல, சூக்கும தேகங்கள். உபாதி - காரண தேகம். (27) முக்குண நிர்க்குணம் 2257. சாத்திக மெய்து நனவெனச் சாற்றுங்கால் வாய்த்த இராசத மன்னுங் கனவென்ப ஓய்த்திடுந் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடு நிர்க்குண மாசில் துரியமே.1 (ப. இ.) மூலப் பகுதியில் வெளிப்படும் முக்குண இயல்பினைச் சொல்லுமிடத்து அமைதிக் குணமாகிய சாத்துவிகம் நனவாகும். ஆட்சிக் குணமாகிய இராசதநிலை கனவாகும். ஈட்டுதல்தொழிலினின்றும் ஓய்ந்து ஊட்டுதற்றொழிலில் தோய்ந்துநிற்கும் அழுந்தற் குணமாகிய தாமதம் உறக்கமாகும். இம் மூன்று குணங்களையும் மாயுமாறு செய்து அருட்குணம் மேலோங்கி நிற்கும்நிலை நிர்க்குணமாகும். இந் நிலைபேருறக்கமாகிய துரிய நிலையாகும். பேருறக்கமாவது உலகினை மறந்து உடலினைத் துறந்து அடலேற்று வெல்கொடிச் சிவனை நினைந்து திருவருளில் அழுந்தும்நிலை. (1) அண்டாதி பேதம் 2258. பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல்அள வாகப் பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் செறியும்அண் டாசனத் தேவர் பிரானே. (ப. இ.) புறத்தே காணப்படும் அண்டங்களும், நிலவண்டம், நீரண்டம், நெருப்பண்டம், காற்றண்டம், வான் அண்டம் என்று சொல்லப்படும் ஒன்றோடொன்று மாறுபட்ட பல அண்டங்களும் அளவில்லன. பேதித்தல் - மாறுபடுதல். அளவில்லன என்பதை ஓர் ஒப்பில் வைத்துக் கூறின் அலை வீசுகின்ற கடல்கள் ஏழென்ப. அவ் வேழின்கரையிற் காணப்படும் மணலை எண்ணுவது முடியாதவாறுபோல அளவில்லன என்பதாகும். தேவர் மூவர் யாவர்க்கும் முழுமுதல்வனாய் விளங்கும் சிவபெருமான் இவ் அண்டங்களனைத்தையும் இருக்கையாகக் கொண்டு பிரிவின்றி விளங்குகின்றனன். கண்ணும் ஒளியும் பொன்னும் அணியும் ஒன்றைவிட்டு ஒன்று தனித்து விளங்காமைபோன்று சிவனும் அண்டத்துடன் தனித்துப் பிரித்தறியவாரான்.
1. நிர்க்குணனாய். சிவஞானபோதம், 9. 2 - 1. (ப. இ.) நன்னெறி நான்மையால் நன்றான திருவடி உணர்வு வெளிப்படும். நாதங்கடந்து அந் நாதத்தையும் இயக்கும் முழுமுதல்வனாகிய சிவபெருமான் நாதப்பிரான் எனப்படுவன். அவன் அருளும் பரமும் ஆருயிர் செய்யும் அன்புமாய் நின்றருள்கின்றனன். ஆருயிருடன் பிரிவின்றி விரவி ஒன்றாய் மருவியிருக்கும் பருவுடல் நுண்ணுடல் முதலுடன் ஆகியவைகள் ஆருயிர்களைவிட்டு அகலும்படி செவ்விநோக்கிச் சிவகுருவாய்ச் சென்றருளினன். அடியேனைவிட்டுத் தான் யாண்டும் செல்லாமையும் பூண்டருளினன். உபாதி: முதலுடம்பு; காரணவுடம்பு. (அ. சி.) நேயம் - அன்பு. உருவு - தூல, சூக்கும தேகங்கள். உபாதி - காரண தேகம். (27) முக்குண நிர்க்குணம் 2257. சாத்திக மெய்து நனவெனச் சாற்றுங்கால் வாய்த்த இராசத மன்னுங் கனவென்ப ஓய்த்திடுந் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடு நிர்க்குண மாசில் துரியமே.1 (ப. இ.) மூலப் பகுதியில் வெளிப்படும் முக்குண இயல்பினைச் சொல்லுமிடத்து அமைதிக் குணமாகிய சாத்துவிகம் நனவாகும். ஆட்சிக் குணமாகிய இராசதநிலை கனவாகும். ஈட்டுதல்தொழிலினின்றும் ஓய்ந்து ஊட்டுதற்றொழிலில் தோய்ந்துநிற்கும் அழுந்தற் குணமாகிய தாமதம் உறக்கமாகும். இம் மூன்று குணங்களையும் மாயுமாறு செய்து அருட்குணம் மேலோங்கி நிற்கும்நிலை நிர்க்குணமாகும். இந் நிலைபேருறக்கமாகிய துரிய நிலையாகும். பேருறக்கமாவது உலகினை மறந்து உடலினைத் துறந்து அடலேற்று வெல்கொடிச் சிவனை நினைந்து திருவருளில் அழுந்தும்நிலை. (1) அண்டாதி பேதம் 2258. பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல்அள வாகப் பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் செறியும்அண் டாசனத் தேவர் பிரானே. (ப. இ.) புறத்தே காணப்படும் அண்டங்களும், நிலவண்டம், நீரண்டம், நெருப்பண்டம், காற்றண்டம், வான் அண்டம் என்று சொல்லப்படும் ஒன்றோடொன்று மாறுபட்ட பல அண்டங்களும் அளவில்லன. பேதித்தல் - மாறுபடுதல். அளவில்லன என்பதை ஓர் ஒப்பில் வைத்துக் கூறின் அலை வீசுகின்ற கடல்கள் ஏழென்ப. அவ் வேழின்கரையிற் காணப்படும் மணலை எண்ணுவது முடியாதவாறுபோல அளவில்லன என்பதாகும். தேவர் மூவர் யாவர்க்கும் முழுமுதல்வனாய் விளங்கும் சிவபெருமான் இவ் அண்டங்களனைத்தையும் இருக்கையாகக் கொண்டு பிரிவின்றி விளங்குகின்றனன். கண்ணும் ஒளியும் பொன்னும் அணியும் ஒன்றைவிட்டு ஒன்று தனித்து விளங்காமைபோன்று சிவனும் அண்டத்துடன் தனித்துப் பிரித்தறியவாரான்.
1. நிர்க்குணனாய். சிவஞானபோதம், 9. 2 - 1.
|