973
 

2393. ஒன்றுண்டு தாமரை யொண்மலர் மூன்றுள
தன்றாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு
இன்றேசென் றீசனை யெய்தலு மாகுமே.

(ப. இ.) தாமரையாகிய சுழுமுனை ஒன்றுண்டு. அதன்கண் தாது மிக்க அழகிய ஒள்ளிய மலரும் மூன்றுண்டு. அதற்குரிய தாள்களும் இரண்டுள. தாளிரண்டு: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு. மலர் மூன்று: மூன்று நரம்பங் கூடியமைந்த முடிச்சு. உடம்பகத்து மூலக்கனலால் நன்றாக வெதுப்பியபோது உள்ளம் செவ்வி வாய்க்கும். செவ்வி வாய்த்த வல்லார்கட்கு வாய்த்த அப்பொழுதே சிவபெருமானைச் சென்று தலைக்கூடுதலும் ஆகும்.

(அ. சி.) தாமரை - சுழுமுனை. மலர் - இதழ். காய்ச்சி - மூலக் கனலால் வெதுப்பி, பதம்செய - மனத்தை வசப்படுத்த.

(8)

2394. கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்
பால்கொண்ட வென்னைப் பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பவொண் 1ணாதே.

(ப. இ.) அடியேன் முடியில் சிவபெருமான் திருவடியினைச் சூட்டியருளினன். சூட்டலும் கட்டற்றது. ஆணவக் கட்டறலும், மாயா காரியப் பொருள்களினிடமாகவுள்ள நெஞ்சின் மயக்கம் நீங்கிற்று. மயக்கம் நீங்கவும் திருவடியுணர்வாகிய சிவஞானத்தை அடியேற்கு அளித்தருளினன். அவ்வுணர்வு பெற்ற என்னை மேலாம் தம் வண்ணம் ஆக்கத் திருவுள்ளங்கொண்டருளினன். அதனால் ஆரா இன்பத் திருவடியிணையின் மேல்நிலையைப் பெற்றின்புற்றேன். அத்தகைய மேற்கொண்டு துய்க்கும் செம்மை நலம் சொல்லிறந்ததொன்று.

(அ. சி.) கால் - திருவடி, கட்டு - பிறப்பு, மால் - மயக்கம், துயக்கு - கேடு. பால்கொண்ட - ஞானத்தின் பால்பட்ட, செம்மை - நன்மை.

(9)

2395. பெற்ற புதல்வர்போற் பேணிய நாற்றமுங்
குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்
பற்றைய வீச னுயிரது பான்மைக்குச்
செற்றமி லாச்செய்கைக் கெய்தின 2செய்யுமே.

(ப. இ.) தாய் தந்தையராகிய இருமுது குரவர்கள் தம் அன்பும் அருமையும் நிறைந்த மக்களைப் பேணி வளர்ப்பதன் பொருட்டு நிறைந்த அன்புடன் செய்யும் முறைமைபோல் சிவபெருமானும் ஆருயிரின் கன்ம வாசனையாகிய நாற்றத்திற் சேற்றவாறு அவ்வுயிர்களின் குற்றமுங் கணமும் கண்டு, அவ்வவற்றிற்கு ஏற்றவாறு செய்தருள்கின்றனன். இங்ஙனம் செய்தருளுதற்குப் பற்றுக்கோடாகவுள்ளவன் சிவபெருமான்


1. தம்மானை. ஆரூரர், 7. 38 - 1.

2. தந்தைதாய். சிவஞானசித்தியார், 2. 2 - 6.

" அறத்திற்கே. திருக்குறள், 76.