994
 

(ப. இ.) மூவகையான ஆருயிர்கட்கும் மாளிகை யொத்த உடல்களும் மூன்றுள. அவை முறையே பருவுடல், நுண்ணுடல், முதல் உடல் என்பன. முதல் உடலைப் பரவுடல் எனவுங் கூறுப. இதனைக் காரணவுடல் எனவும் இயம்புவர். இம் மூன்றுடல்களிலும் சேர்ந்து நிலமுதல் நீள் ஒலி ஈறாகிய முப்பத்தாறு மெய்களும் தோன்றும். இம் மூன்றினுள்ளும் உயிர்க்கு உயிராய்க் கலந்து நிற்கும் சிவபெருமான் பேரொளிப் பிழம்பாய் முளைத் தெழுந்தருள்வன். அவனை அவனருளால் காணுதல் வேண்டும். காண்டலும் பிறவிப்பேறாம் 'பிறவிப் பெருங்கடல் எல்லையை நீந்துவர்'. இதுவே 'காயக்கணக்கற்றதென' ஓதப்பெற்றதாகும்.

(அ. சி.) மாளிகை - தூலம், சூக்குமம், காரணம்; மூவர் - மூவகையான ஆன்மாக்கள். காயக் கணக்கு - பிறப்பு.

(2)

2441. உலகம் புடைபெயர்ந் தூழியும் போன
நிலவு சுடரொளி மூன்றுமொன் றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையு மாரறி 1வாரே.

(ப. இ.) பேரொடுக்கமாகிய பேரூழிக் காலத்து உலகம் ஒடுங்கிற்று. அத்தகைய ஊழியும் பல கழிந்தன. விளங்குகின்ற ஆருயிர், அருள், அருளோன் என்னும் மூன்றும் அருள்வெளியில் ஒன்றாயின. இம் மூன்றையும் அன்பு அருள் அருளோன் எனவும் கூறலாம். சீவன், பரம், சிவம் எனவும் கூறுப. பலவும் முறைப்படி சிவபெருமான் திருவடிக் கீழடங்கிக் கலப்பால் ஒன்றாயிருப்பினும் சிவபெருமானின் அளத்தற்கரிய அளவினையும் உரைத்தற்கரிய பெருமையினையும் எவராலும் அளந்தறிந்துரைக்க வொண்ணாவென்க. அதனால், ஒருவரும் அறியார் என்பது யாரறிவார் என்னும் குறிப்பால் பெறப்படும்.

(அ. சி.) புடைபெயர்ந்து - நிலைகெட்டு. நிலவு - விளங்குகின்ற. பரிசொடு - முறைப்படி.

(3)

2442. பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவா யுருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வருஞ்சத்தி கோனுயிர்ப் பன்மை
உருவா யுடனிருந் தொன்றாயன் 2றாமே.

(ப. இ.) மாயாகாரிய உருக்களை மலைமுதல் மண் ஈறாகவும் யானை முதல் எறும் பீறாகவும் கண்டு கருதப்படும் வேறுபாடுகளையே ஆருயிர்களுக்குக் காட்டியருளுகின்றனன் சிவன். அவன் எல்லாவற்றுடனும் கலந்து அருவாய் உருவாய் அருவுருவாய்த் தோன்றியருள்வன். அருளே திருமேனியாய்க் குருவாய் எழுந்தருளும் தனிப்பெரும் தலைவனுமாவன். மன்னும் பலவுயிரோடும் கலந்து அவ்வவ்வுயிராய் உருவாய் உடனிருந்தருள்வன். அன்றாம் என்பது இந்நிலைமை சிவபெருமானுக்குத் தொன்மை


1. மறையினால். சிவஞானசித்தியார், பாயிரம், 4.

" வான்கெட்டு. 8. திருத்தெள்ளேணம், 18.

" உருவாய். கந்தரனுபூதி, 51.

" மாதர்ப், அப்பர், 4. 3 - 1.