112
 

விலங்கினத்தோடு ஒப்பன். அச்சுவைகளும் அவனைத் துன்பத்தில் ஆழ்த்தின. ஐம்புல வேடரும் அளவிலாத் துன்பத்தில் ஆழ்த்தினர். முற்செய்த வல்வினையும் கடுமையாகத் தண்டித்தன. இவற்றினின்றும் விலகி இன்புற வேண்டுமென்று அருளால் துணிந்த ஒருவன் சிவபெருமான் திருவடியினை வேண்டி நின்றான். அதனால் அவற்றை வெறுத்தனன். அறுத்தல்: துன்பத்திலாழ்த்தல்.

(அ. சி.) ஆறினும் - அறுசுவையினும்.

(5)


11. அன்புடமை

257. அன்பும் சிவமும்1 இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ2 தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.3

(ப. இ.) அன்பாகிய திருவருளும் இன்பாகிய சிவனும் மணியும் ஒளியும்போல் ஒன்றே. அவற்றை இருவேறு பொருள்கள் என்று கூறுவார் மெய்யுணர்வு கைவரப் பெறாதார். மெய்ம்மையான் நோக்கின் அன்பாகிய திருவருளே இன்பாகிய சிவனுக்குத் திருமேனியாகும். அம் முறையான் அன்பே சிவமாகும். இவ்வுண்மையினையும் எவரும் உணர்கிலர். அன்பே சிவம் என்னும் உண்மையினை அருளால் அனைவரும் அறிந்தபின் தாம் இடையறாது திருவடிக்கண் வைக்கும் அன்பாகிய வித்தே சிவமாய் விளைந்து இன்பாய்க் கனிந்து அவ்வன்புடையார்க்கு என்றும் பொன்றாப் பேரின்ப நுகர்வாகும். அவ்வுண்மை 'சிவமாய் அமர்ந்திருந்தார்' என்னும் இம்மறை மொழியான் உணரலாம்.

(1)

258. பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்4
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

(ப. இ.) பொன்னையும் வென்று விளங்கும் புலித்தோலை ஆடையாகவுடையவன். மின்னொளிபோல் விளங்கும் ஆருயிராகிய இளம் பிறையினை நிறைமதியாக்கற்குச் சூடினன். அப் பிறை அழகுறப் பொருந்தியிருந்தது. அப் பிறை சிவனைச் சார்ந்தமையால் 'பதினெண் கணத்தவராலும் ஏத்தப்படுவதாயிற்று.' சிவபெருமான் திருவெண்ணீற்றுத் திருக்கோலத்தன். அதனால் சுடுபொடியான் என்றழைக்கப்

1. பெருமையால். 12. தடுத்தாட், 196.2. ஆரண, உருவருள். சிவஞானசித்தியார், 1. 2 - 18 - 19.3. மெய்ம்மையா. அப்பர், 4. 76 - 2.4. பொன்னார். ஆரூரர், 7. 24 - 1.