சொல்லப்படுகின்ற எண்புலக் காவலர்களும் பயன்வேண்டிவந்து திருவடி போற்றுவர். போற்றிவழிபடும் முறைமை வரும் மந்திரத்தால் ஓதப்படும். (88) 1219. நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங் கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம் பயிற்றும் உலகினிற் பார்ப்பதி பூசை அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.1 (ப. இ.) உலகோர் பயின்று செய்யப்படும் பார்ப்பதி பூசைக்கண் நெய்யுணாக்கொள்ளும் அறிவொளி அம்மையின் வழிபாட்டிற்கு உயிர் போன்று சிறந்தது நயந்துமொழியும் 'நமசிவய' என்னும் தனித்தமிழ் மந்திரமாகும். அம் மந்திரத்தின் மென்மை, அழகு, மலர்ச்சி, மணம் போன்று விளங்குவன நறுமணம் சேர்மலரும் புகையும். அம் மந்திர ஒளிபோன்று திகழ்வது நறுமணம் கமழும் சுடர்விட்டெரியும் நெய் விளக்கு. கொலைபுலை நீத்தோரே அம்மையைத்தொழும் உலையா நிலைசேர் ஒண்குணத்தோராவர். (319) அவி - பாலவி. (1793.) (அ. சி.) அவிக்கொண்ட - நெய்யவியுண்ட. (89) 1220. தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி பூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்று பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.2 (ப. இ.) அழகிய பசுங்கிளி மொழிவேட்டுத் தங்கும் திருக்கையினையும் பின்னால் திருச் சடையினையுமுடைய திருவருளம்மை பண்டே சிவபெருமானை ஒருபாகத்தே கொண்டனள். அதனால் அப்பராபரனாகிய சிவன் உலகினைத் தாங்கினன்; திங்களைச் சூடினன்; ஊழிக் காலத்தும் கெடா ஒருவனாய்நின்றனன். ஓங்கிய காலம் - ஊழிக்காலம். உலப்பிலி - அழிவில்லாதவன். அத்தகைய பேரறிவுப் பேராற்றலை வழிபடுவாயாக. (அ. சி.) உலப்பிலி - அழிவில்லாதவன். (90) 1221. பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர் அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள் நற்கொடி மாதை நயனங்கண் மூன்றுடை விற்கொடி மாதை விரும்பி விளங்கே. (ப. இ.) கரிய கொடிபோலும் நிறம்வாய்ந்த உமையம்மையை, ஆருயிர்கள்மாட்டு நீங்கா ஆர்வம்பூண்ட முதல்வியை, நல்ல கொடி போலும் இடையினையுடைய எழிலியை, மூன்று திருக்கண்களையுடைய மூப்பியை, தொடரொளி விளங்கும் துணைவியைச் சூழவரும் பொன்போல் விளங்கும் பணிப்பெண்கள் திருவடிதொட்டு வழிபடுவர்.
1. அவிசொரிந். திருக்குறள், 259. " நன்றாகும். " 328. 2. பெண்ணிற். " 54. " கற்றார். அப்பர், 4.104-2.
|