1184
 

உள்ளது என்பதை, "ஏடங்கை நங்கை" என்ற திருமந்திரப் பாட்டாலும் அறிக). மலராத பூ - சிவம். பிறவாத வண்டு - பிறப்பற்ற சீவன். மணம் - சிவானந்தம்.

(20)

2846. போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்துங்
கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற வரை விருத்திபெற் 1றாரன்றே.

(ப. இ.) போகின்ற பொய்யாகிய விடுத்தல் மூச்சும், புகுகின்ற பொய்யாகிய எடுத்தல் மூச்சும், ஓவாது பயிலப்படுதலால் வீணாகக்கழியும் நால்விரல் மூச்சு கூகின்ற வித்தெனப்படும். கூகின்ற-அழைக்கின்ற வெளியிற் செல்லும் உயிர்ப்பினை உள்ளிழத்தலால் அழைக்கின்ற என ஓதப்பட்டது. வித்து நிலையாகநிற்பது. தடுத்தல் மூச்சினைக் கும்பகம் என்ப. அம்முறை உயிர்ப்புப் பயிற்சியான் நாவலனைய உடம்பகத்து இருவினைப் பயனாகிய பைங்கூழை ஆருயிர் உண்ணும். ஐவராகிய அறிதற்கருவி ஐந்தும் அழியும் தன்மைத்தாகிய இவ்வுடம்பினின்றும் நுகர்வு பெற்றார் என்க. விருத்தி - ஆக்கம்; நுகர்வு.

(அ. சி.) போகின்ற பொய் - இரேசக வாயு. புகுகின்ற பொய்வித்து - பூரக வாயு. கூகின்ற (பொய்) - கூடுகின்ற வாயு, அஃதாவது நான்கு விரற்கடையுள்ள வாயு. நாவலின் கூழை - சரீரம். பைங்கூழ் - இரு வினைப்பயன். ஐவர் - ஞானேந்திரியங்கள். வேகின்ற கூரை - சரீரம்.

(21)

2847. மூங்கின் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினிற் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறன்றே.

(ப. இ.) மூங்கில் முளையாகிய மனத்தின்கண் திருவருளால் ஆருயிர்களை உயிர்விக்கவேண்டி எழுந்ததோர் வேம்பாகிய சிவன் உண்டு. சிவனார் வேம்பென்னும் மருந்தொன்றுண்டு. அது பூண்டு வகையைச் சார்ந்தது. அச் சிவனார் வேம்பினைச் சார்ந்துகிடந்தது. ஒப்பில்லாத பனையொன்று. பனையென்பது கற்பகத்தருவாகும். பனையென்பது நடப்பாகிய மறைப்பாற்றலாகும். அந்நடப்பாற்றலாற் செலுத்தப்படுவது அறியாமையாகிய பாம்பென்ப. அப் பாம்பாகிய அறியாமையைத் திருவருட்டுணையால் துரத்தித் தின்பா ரரியராகின்றனர். துரத்தித் தின்றல் - நீக்குதல். அருளால் அறியாமையை நீக்குவாரின்மையால் சிவம் என்னும் வேம்பு கூடுதலின்றிப் பிரிந்துகிடக்கின்றது. வெடிக்கின்றது - பிரிகின்றது. அறியாமையாகிய ஆணவம் பாம்பாகிய மாயையின் வழித் தொழிற்படுதலால் காரணத்தைக் காரியமாக ஏற்றிக் கூறப்பட்டது.

(அ. சி.) மூங்கில் - மனம். வேம்பு - சிவம். பனை - திரோதானம். பாம்பு - அஞ்ஞானம். வெடிக்கின்றவாறு - அறியப்படாத தன்மை.

(22)


1. துருத்தியாங். அப்பர், 4. 25 - 4.