(அ. சி.) கொங்கு புக்காரொடு - இந்திரிய வழிச்சென்றவரோடு. அங்கு - துரிய அவத்தையில். திங்கள் புக்கால் - தண்ணிய ஒளி வெளிப்படுமாகில். தங்கு புக்கார் - துரியத்தில் நின்றார். (64) 2890. போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது தாதவிழ் புன்னை தயங்கு மிருகரை ஏதமில் ஈசன் இயங்கு நெறியிது மாத ரிருந்ததோர் மண்டலந் 1தானன்றே. (ப. இ.) திருவருள் நினைவால் அறியாமையாகிய இருட்பொழுதும் விடிந்தது. பேரறிவாகிய சிவஞாயிறு எழுந்தது. பொன்னிறம் பேரறிவு. பூந்தூள் சிந்தும் புன்னை மரங்கள் என்பது திருவருளைப் பொழியும் பெரும் பொருளாம் சிவம் என்பதாகும். அச் சிவன் அகமும் புறமுமாகிய இரு கரைகளிலும் வெளிப்பட்டு நின்றருள்வன். எக்குற்றமுமில்லாத முக்கணானாகிய சிவபெருமான் செவ்வியுயிர்க்கு உடனாய் நின்று உதவும் ஒப்பிலாவுதவி இதுவாகும். நெறி ஈண்டு நெறியின் பயனாகிய உதவி. அது காரியத்தைக் காரணமாக ஏற்றிக் கூறினார். மாதர் - அழகு. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகாகும். அத்தகைய அழகு நிறைந்த நிலவுலகம் இத்தகைய நற்றவர் வாழுமிடம். (அ. சி.) போது - அஞ்ஞான இருள். புலர்ந்தது - நீங்கிற்று. பொன்னிறம் - ஞான ஒளி. தாதவிழ்புன்னை - அருளைப் பொழியும் சிவம். இருகரை தங்கும் - உள்ளும் புறமும் விளங்கும். மாதர் - அழகு. மண்தலம் - பூமி. (65) 2891. கோமுற் றமருங் குடிகளுந் தம்மிலே காமுற்ற கத்தி இடுவர் கடைதொறு மீவற்ற வெல்லை விடாது வழிகாட்டி யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாகுமே. (ப. இ.) கோபமுற்றென்பது கோமுற்றென நின்றது. எனவே வெறுப்புற்றென்பதாகும். இனம்பற்றி விருப்பும் கொள்ளப்படும். வெறுப்பு விருப்புக்கள் காரணமாக ஆருயிராகிய குடிகள் தாங்கள் விரும்பிய புலப்பொருள்களை அடைய முயன்று அப் பொருள்கள் உள்ள இடங்களின் வாயில்கள்தோறும் சென்று உரத்தகுராலில் குறையிரந்து நிற்கும். அங்ஙனம் நிற்கும் அவ் வுயிரைத் திருவருட் சிவகுரு மீ ஆகிய மேற்பிறப்பு வற்றுதற்பொருட்டு உள்ளத்தை உலக வியல்புகளிலே செல்லவொட்டாது நன்னெறிக்கு உய்க்கும் நாதன் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைச் செவியறிவுறுத்தியருள்வன். ஆருயிர் முனைப்பையும் நீக்கியருள்வன். நீக்கினால் என்பது தட்டினாலென்னும் சொல்லாற்றலாற் பெற்றாம். அம் முனைப்பு நீங்கவே திருவைந்தெழுத்தாற் பெறப்படும் திருவடிப்பேரின்பம் நுகரலாம். இதற்கமை திருவைந்தெழுத்துச் 'சிவய சிவ' (2560) என்ப இது 'நால்வர்நம் மூலர் நயந்தெமையாள் ஐங்குரவர், சால்பாம் 'சிவயசிவ' சார்ந்து' என்பதனாற் காண்க.
1. மாதர்ம. சம்பந்தர், 9. 136 - 1. " பொற்றியென். 8. திருப்பள்ளியெழிச்சி 1.
|