231
 

இதற்கொப்பாகும். விளையாட்டிடத்தும், பொய்ம்மையாகவுங்கூடப் பகையென்னும் சொல்லைக் கேட்டலும் நன்றன்று. அப்பகை - பிறப்புப் பகை. இறைவனை - முழுமுதற் சிவனை.

(அ. சி.) பொய்ப்பகை - விளையாட்டுப் பகை.

(3)

512. போகமும் மாதர் புலவி யதுநினைந்
தாகமும் உள்கலந் தங்குள னாதலில்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.1

(ப. இ.) மாதருடன் கூடியும் ஊடியும் அவர்களையே விடாமல் நினைந்துருகும் மயக்கமுள்ளவராதலால். வேதிய ...வாரே - மெய்யுணர்வு கைவந்த தவத்தோர் உணரும் முறையுள் நிலைபெற்று நிற்கும் இறைவனை நினையும் தவப்பேறில்லாது கழிவர். மெய்யுணர்ந்தார் மாதரொடு கூடி மகிழினும் போதொடுநீர்சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகு'வோராதலால் சிவனடியைத் தப்பாது சேர்ந்து இன்புறுவர்.

(4)


22. குருநிந்தை

513. பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்2
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

(ப. இ.) கீழானவர் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும், பேண மாட்டார் நெருங்கிய உறவினரையும் மிகவும் வருந்தும்படி கடுமொழி கூறி நீக்குவர். கற்றிருந்...பேறே - உண்மைநூற் கல்வியுடைய ஆசானை அடுத்து அவர்வழி ஒழுகும் மேலானவர் பெற்ற தாய் தந்தையர்க்கு மட்டும் அல்லாமல் எல்லார்க்கும் நல்ல முறையாக நடந்து அவரவர்களும் தங்கள் தங்கள் பாக்கியம் என்று சொல்லும் நிலையினராவர். பேறு - பாக்கியம்.

(1)

514. ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

(ப. இ.) திருவைந்தெழுத்து ஓதிவரும் வன்மை மிக்க சிவனடியாரை மனம் வருந்தும்படி நினைவாலும் சொல்லாலும் செயலாலும் புரிபவர், ஊழிக்காலம் நாயாய்ப் பிறந்து உழன்று துன்புறுவர். பலவூழிக்


1. நாடுகளிற். சிவஞானசித்தியார், 10. 2 - 5.

2. பகச்சொல்லிக். திருக்குறள். 187.