திருவைந்தெழுத்துத் திருமறையினைக் கணித்தல் கைகூடும். வட பெருங்கல்லும் தென்பெருங் கடலும் நடங்கொள் இடமாகக் கொண்டருளும் சிவபெருமான் திருவைந்தெழுத்து எண்ணுபவர் சிந்தையே திருக்கோயிலாகக் கொண்டருள்வன். செவியறிவுறூஉ உபதேசம். (அ. சி.) பைய - மெதுவாக. குறிவழி - உபதேசப்படி. (9) 2002. சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழவதில் தாங்கலு மாமே. (ப. இ.) வாழ்நாள்கள் நாழிகை, நாள், திங்கள், ஆண்டு முதலிய பெயர்கொண்டு சிலபல சென்றன. நெடுநாள் நிற்கும் பொருள்போல் காணப்படும் 'இவ் வுடல் நீர்மேல் எழுத்துப் போன்று சடிதின் மறையும் தன்மைத்தாய் நின்றது. திருவருளால் புலன்களை அடக்கி விரைந்து வேட்கையினை விட்டு அகலுங்கள். அகன்றால் குன்றுபோல் காணப்படும் புறப்பொருள்கள்மேற் செல்லும் பொறிகளைத் தடுத்தலுமாகும். குன்று உவமையாகு பெயராகப் பொருள்களை - விடயங்களைக் குறிப்பதாயிற்று. தாங்கல் - தடுத்தல். (அ. சி.) பொருள் - உடல். விடுமின்கள் - அடக்குங்கள். குன்று....... தாங்கல் - விடயங்களிற் செல்லாமல் தடுத்தல். (10) 2003. போற்றிசைத் 1துப்புனி தன்திரு மேனியைப் போற்றிசெய் மீட்டே புலனைந்தும் புத்தியால் நாற்றிசைக் கும்பின்னை யாருக்கு நாதனை ஊற்றுகை யுள்ளத் தொருங்கலு மாகுமே. (ப. இ.) தூயோனாகிய சிவபெருமான் திருமேனியைப் போற்றிசைத்துத் தொழுங்கள். சிவனினைவாகிய சிறந்த அறிவினால் புலன்களைப் புன்னெறியதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறியொழுகச் செய்யும் பெருநலம் வாய்க்கும். அந்நலத்தால் நாற்றிசைக்கும் முன்னையும் பின்னையுமாக விளங்கும் அனைத்துயிர்க்கும் முழு முதல்வன் சிவன். அவனே நாதனாகவும் விளங்குவன். அச் சிவபெருமானைத் திருவடி இன்ப ஊற்றமிழ் துண்டாம் நெஞ்சகத்துக் கண்டு தொழுக; அதனால் அவன் திருவடிக்கண் ஒடுங்குதலும் நிலை பெறும் என்க. நாதன் - மெய்க்குரவன். (அ. சி.) ஊற்றுகை - அமிர்தப் பெருக்கு ஒருங்கல் - ஒடுங்குதல். (11) 2004. தரிக்கின்ற நெஞ்சஞ் சகளத்தி னுள்ளே அரிக்கின்ற 2ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்ற வாறு சிலபல பேசில் வரிக்கொண்ட மைசூழ் வரையது வாமே.
1. போற்றிசைத்துன் - 4. 58 -10. 2. அரிச்சுற். அப்பர், 5. 1 - 3
|