(ப. இ.) தூயேனாக விளங்கிய அவ் வாருயிர்க்கிழவன் ஈசன் என்று அழைக்கப்பெறுவன். அவ் வுயிர் அப்பால்நிலையில் திருவடியுணர்வாய்த் திகழும். சிவவுலக நுகர்வுகளை நுகரும். அருளோன் முதலாக அயன் ஈறாகச் சொல்லப்படும் தூமாயை அருள்விளக்க வடிவங்களை எய்தும் திருவருளால் அவ் வடிவங்களை அகன்று தூய சிவனாகி ஞானவரம்பாம் மோனம் எய்திப் பேரறிவுப் பேரொளிப் பெருமுதல்வனாக விளங்குவன். மோனம்: முன்மை, மேன்மை என்பன வற்றின் மரூஉவாகும். இந் நிலை ஒலிமெய்யாகிய நாதமுங் கடந்த நிலையாகும். முன்மைஞானம் - மோனம். (அ. சி.) வித்தையாய் - ஞானமாய். மேனிகள் ஐந்து - ஐந்து மூர்த்திகள், அயன் முதல் சதாசிவம் ஈறாக. (32) 2179. மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக் கண்டுகொண் டுள்ளே கருதிக் கழிகின்ற விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத் தண்டமுந் தானா யகத்தினுள் ளாமே. (ப. இ.) ஆருயிர்களின் உடலகத்துக் காணப்படும் மூன்று மண்டலங்களையும் முதல்வனருளால் கண்டுள்ளார் அம் மாயாகாரிய நன்னாட்டை உடைமையாகக்கொண்டுள்ள உரிமையர் சிவபெருமானார் என்பர். அவனை மாயநன்னாடனென்பர். அவனை அகத்துக் கண்டுள்ளவர் அவனை அகத்தே அவனருளால் கண்டு கருதுவர். கண்டு கருதிக் கழிந்து மேல்விளங்கும் விரிந்த ஆயிரம் இதழையுடைய அருள்வெளித் தாமரையைப் பொருந்தியும் நிற்கும் அகத்தவத்தோர்க்குப் புறத்தே காணப்படும் அண்ட முதலிய பொருள்கள் அனைத்தும் ஆடியிற் காண்பது போன்று அகத்தே காணப்படும் தொலைநிழற் காட்டி (Television) வாயிலாக ஒலியைப்போல் உருவையுங் காணும் இற்றை ஞான்று இதனை நம்புவதற்கில்லென்று கூற எவரும் முந்துறார். இற்றை ஞான்று கருவிகளின் வாயிலாக நாம் காணும் வியத்தகு புதுமைகளை நம் முன்னோர் அகத்தவ முயற்சியால் அருள் கருவியாகக் கண்டுள்ளனர் தண்டமென்பது நடுநாடியாகும். மாய நன்னாடனைக் காண்பதென்பது உலகமே உருவமாகக்கொண்டு திகழும் அவனது பரப்பினைக் காண்டலேயாகும். காண்டல்: உணர்வின்கண் உணர்தல். (33) 2180. போதறி யாது புலம்பின புள்ளின மாதறி யாவகை நின்று மயங்கின வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை சூதறி வாருச்சி சூடிநின் 1றாரே. (ப. இ .) புள்ளினங்களென்று சொல்லப்படும் ஆருயிர்கள் செவ்வியாகியபோது அறியாது புலம்பின. திருவருளாற்றலாம் மாதினை யறியாது நின்று மயங்குவவாயின. வேறுபிரித்துக் காணமுடியாத நிலைமையாய் வேறறப் புணர்ந்து நின்றனன் சிவன். அவன் திருவடி
1. அவனே. சிவஞானபோதம், 10. " பார்கொண்டு. அப்பர், 4. 82 - 1. " குடம்பை. திருக்குறள், 338.
|