975
 

உண்டாகும். தாமம் ஒளி. முக்குற்றம் கடிந்தார்க்குச் சிவ ஒளி வந்து தானே தலைப்படும். திருவள்ளுவ நாயனாரும் பிறப்புக்கு வித்தாயுள்ளன "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன், காமங் கெடக்கெடும் நோய்." (360) என்னுந் திருக்குறளால் மேலோதிய மூன்றுமே என்றருளினர், ஒருபுடையொப்பாகக் காமத்தால் மாயையும், வெகுளியால் வினையும், மயக்கத்தால் மலமும் பெறப்படும். அருளால் இவை நீங்கும் இவற்றின் நீக்கத்தால் மும்மல நீக்கமும் பெறப்படும்.

(அ. சி.) ஏமம் - சிவானந்தம், எறிமணி - அடிக்கும் மணி, தாமம் - ஒளி, ஈண்டுச் சிவ ஒளி.

(2)

9. முப் பதம்

2398. தோன்றிய தொம்பதந் தற்பதஞ் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
ஆன்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாளச் சிவமா 1யிருக்குமே.

(ப. இ.) பிறப்பு இறப்புகட்கு உட்பட்டுத் தோன்றிவரும் ஆருயிரைத் தொம்பதம் என்பர். தொம்பதம் என்பதும் துவம் என்பதும் ஒன்றே. துவம் என்பது நீ என்னும் பொருள் தரும். அந்நீ, தத்பதமாகிய அது என்னும் சிவபெருமானை அருளால் சூழ்தருவாயாக. அங்ஙனம் சூழ்தரும் உன்னை அசிபதம் அச் சிவமாம் பெருவாழ்வினை ஆக்கியிடும். இக் குறிப்பு; தத்துவமசி - தத் - அது, துவம் - நீ, அசி - ஆகின்றாய். எனவே நீ அது ஆகின்றாய் என்பது அம்மறையின் பொருள். இம் முறைப்படி சிவபெருமான் வடிவம் எய்தினோன் நிறைந்த முழுமுதற் சார்பினன் ஆவன். நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் பிறப்பு நீங்குதற் பொருட்டு அப் பிறப்பினை மலச் சார்பால் ஏன்று கொண்டோன் நலச் சார்பால் அம் மலச்சார்பு மாண்டொழியச் சிவச்சார்பு எய்திச் சிவமாகவே இருக்கும். செய்ய சிவமாதல் சிவச்சார்பு முற்றுமாய்த், துய்யசிவ இன்பருளால் துய்ப்பு என்ப ஆகலின் சிவச்சார்பே சிவமாதல் என்க.

(அ. சி.) முப் பதம் - தத் + துவம் + அசி, தத்துவமசி. ஏன்ற - பொருந்திய. ஆன்ற - பூரணமான, ஏன்றனன் - சீவனது பாசம், மாள - ஒழிய.

(1)

2399. போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியிற் கைவிட்டு
வேதஞ்சொல் தொம்பத மாகுதன் மெய்ம்மையே.

(ப. இ.) திருவருளால் ஆருயிர் தம்மறிவு விளங்குவதற்குப் பூத முதலாகச் சொல்லப்படும் உடலின்கண்ணுள்ள மெய்கள் (2139) தொண்ணூற்றாறு. அக் கருவிகளின் வேறுபாடுகளும் பல. இவை யனைத்தும் கருவிகளே யன்றிக் கருத்தாவல்ல. நாம் கற்கும் நூல் நம்முடைய அறிவு


1. யாவையும். சிவஞானபோதம், 7.