ஒன்றுண்டு. அச் சிவப்பழத்தினை (2922) ஆருயிர் உண்ணாவண்ணம் ஊறுசெய்யும் காமம் வெகுளி கடும்பற்றுள்ளம் முதலிய பறவைகளும் ஆங்குள்ளன. அதனை அப் பறவைகள் புகுந்துண்ண வொட்டாது. திருவடியுணர்வாம் நுண்கணையினால் திருவருள் துணைகொண்டு எய்தல் வேண்டும். அங்ஙனம் கணை எய்து துரத்தினால் செம்பொனின் மிக்க சிறந்த சிவனிலையினைச் சென்றெய்தி யின்புறலாம். (.அ. சி.) வம்பு பழுத்த - வாசனை மிகுந்த, அஃதாவது எல்லாவற்றையும் அறியும். மலர் - மலராகிய உச்சித்தாமரை. பழம் - ஞானமாகிய பழம். பறவை - காமாதிகள். அம்பு - அம்புபோலும் கூர்மையான மதி. (12) 2562. மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால் தியக்கஞ்செய் யாதே சிவனெம் பெருமான் உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. (ப. இ.) செந்நெறி யொழுகும் செம்பொருட்டுணிவினரை மயக்கம் செய்தற் பொருட்டு முனைந்தெழும் ஐம்புலப் பாசங்களை அருளால் அறுத்தருளுபவன் சிவன். அவனே ஆருயிரின் தடுமாற்றப் பிறப்பின் கலக்கத்தையும் தவிர்த்தருளினன். அவன் திருவடியினைத் தொடருங்கள். அங்ஙனம் அளவிறந்த காதலுடன் தொடர்ந்தால் ஒரு சிறிதும் மயக்குவதைச் செய்யாமல் எம்பெருமானாகிய சிவன் ஆருயிர் உய்ந்து போமாறு அவ் வுயிர்களின் மனத்தை ஒருமைப்படுத்தி யருள்வன். (அ. சி.) துயக்கு - கலக்கம். தியக்கம் - மயக்கம். உயப்போ - உய்ந்துபோ. (13) 2563. மனமது தானே நினையவல் லாருக்கு இனமெனக் கூறு மிருங்காய மேவல் தனிவினி னாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் 1புவிக்கே. (ப. இ.) சிவபெருமான் திருவடியிணையினை மனமாறாது பயிற்சி மிகுதியால் தானே நினையும். அத் தன்மை வாய்ந்த திருநெறி வல்லார்க்கு அவர் தம் அரும்பெரும் அறிவுத் தொண்டினுக்குத் துணையாய் இனமாய் நிற்பது அவர் தம் தூய உடம்பே யாகும். அவ் வுடம்பு மேவும் ஒண்மையுடன் தனித்திருந்து சிவபெருமானைத் திருவருளால் உள்ளக் கிழயின் உருவெழுதி அத் தலைவன்பால் ஒப்புவித்தல் வேண்டும். அதுவே தக்கன செய்யும் தவமாகும். அத் தவத்தினைச் செய்யில் தூயோனாகிய சிவன் தன் திருவடியுணர்வாம் அறிவு நிலத்தில் உய்ந்து போமாறு அருளிச் செய்வன். (அ. சி.) இருங்காயம் - பெருமையுள்ள சரீரம் - தனிவினில் தனித்திருந்து. போதப் புவி - ஞானபூமி. (14)
1. மனமது. சிவஞானசித்தியார், 2 . 2 - 21. " வாழ்த்த. அப்பர், 5. 90 - 7.
|