யால் அதனைப் பேர்ந்தறப் பார்ப்பார்கள். இது கட்டுங் கயிறு இற்றொழிந்தால் வேறொன்றற்குப் பயன்படுவதன்றிக் கட்டுவதற்குப் பயன்படாதல்லவா? அதுபோல் ஏறுவினையும் செய்தாரைப் பணிக்கும் வன்மையின்றி செயப்பட்டார் வினை வீறு கொண்டெழ ஊறும் உரமாய் நிற்கும். ஞாயிற்றின் ஒளிகண்டே தன்னைக் காணும் ஞாலத்தார் போன்று திருவடியுணர்வுடையார் தலைவனாகிய சிவபெருமானைக் கண்டே தம்மையும் காண்பர். அவர்தம் ஐம்புலனும் பண்டு போலன்றி இன்று சிவபெருமானையே அருளால் நாடுகின்றது. அதனால் அவர் தம்மைக் காண்பதும் தலைவனைக் காண்பதுந் தகும் என்க. பாடிகாவலர் - ஊர்காவலர். (அ. சி.) முன்னைவினை - ஊழ். உண்டே - அனுபவித்தே. பின்னை வினை - இந்தப் பிறப்பில் இயற்றும் வினை (ஆகாமியம்; கணார் - செய்யார். போந்தற - கன்மத்தை விட்டு இருக்க - நன்மையில் - நன்மையைச் செய்வதில். (1) 2565. தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு 1ளாலன்றே. (ப. இ.) ஆருயிர்க்கு இருவினை யொப்பும், மலச் செவ்வியும் வாய்த்த வழித் திருவருள் வீழ்ச்சி எய்தும் அருள் வீழ்ச்சியினைச் சத்திநிபாதம் என்பர். இன் வீழச்சியினையே சென்னியில் வைத்த சிவனருள் என்று ஓதினர். அச்சிவனருள் வலத்தால் தன்னை யறிந்திடுவர் திருவடியுணர்வினராகிய தத்துவ ஞானிகள். அவன் முன்னைவினையாகிய எஞ்சுவினையின் முடிச்சை அவிழ்த்து அகற்றுவர். முடிச்சவிழ்த்தலாவது வறுத்தவித்துப் போல் குருவருள் சார்ந்ததும் பயனில்லாமல் அவர் தம் திருக்கடைக்கண் நோக்கத்தாலாக்குதல். முடிச்சு முடிச்சாக முடிந்தமைத்த கண்ணிவலை முடிச்சு அவிழ்ந்தால் பயன்படாதல்லவா? அதுபோன்றதாகும் இதுவும். பின்னை வினையாகிய ஏறு வினையைப் பிடித்துப் பிசைவர். பிசைதல் - உருவுற்றெழா வண்ணம் உருக்குலைவித்தல். முடியணி பொடியாய் உருக்குலைந்து வடிவிழந்த காலத்து அணியப்படாமை இதற்கொப்பாகும். முடியணி: தலையில் அணியும் அணி; திருமுடி எனினும் ஒக்கும். (அ. சி.) முன்னை வினையின் முடிச்சு - சஞ்சிதம். பின்னைவினை - ஆகாமியம். (2) 2566. மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும் மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால் தனைமாற்றி யாற்றத் தகுஞானி 2தானே.
1. இவனுலகி - சிவஞானசித்தியார், 10. 2. இதமகி - சிவஞானசித்தியார், 2 - 2 - 10. " மனமது. " " " 21.
|