(ப. இ.) சிவகுருவினருளால் திருவடியுணர்வு தோன்ற அறிவர். அறிந்தபின் தோன்றல் தோன்றாமையாகிய நினைப்பும் மறப்பும் நீங்கும். மயக்க அறிவுகளும் அகலும் . அறிகின்ற நனவு கனவு உறககம் முதலிய பாடுகள் மூன்றும் நீங்கும். ஆருயிர்ச் செயலறல் அருட் செயலறல் அருளோன் செயலறல் மூன்றும் அறும். அறவே, சித்தத்தின்கண் திருவடியூன்றிய நந்தி உணர்வின் நேர்பெற எழுந்தருள்வன். அந்நிலையில் அப் பேறு பெற்றவன் உயர்ந்த மோன நிலையினனாவன். மோனம் : மேன்மையாற் பெறப்படும் உணர்வு. (அ. சி.) மான்ற - மயக்கமுள்ள. மறி - மாறி வருகிற. நனவாதிகள் மூன்று - நனவு, கனவு, சுழுத்தி . துரியங்கள் மூன்று - சிவ, சீவ, பரதுரியங்கள். ஊன்றிய - நிலைபெற்ற. (5) 2613. சந்திர பூமிக் குடன்புரு வத்திடைக் கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்த மிலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரங்குரு பற்றன்றே. (ப. இ.) திங்கள் மண்டிலத்தினூடு கூடிப் புருவ நடுவாக இருக்கும் நறுமணம் கமழும் இரண்டிதழ்த் தாமரை மலரை நெருங்குதல் வேண்டும். நெருங்கி ஆங்கு வீற்றிருக்கும் திருவருளாற்றலாய் கன்னியைக் காணுதல் வேண்டும். அத் திருவருள் பளிங்கின் (1043) வண்ணத்தளாவள். அத்திருவருளின் பெறலருந்துணையால் சிறந்த சிவஞான மெய்க் குருவின் திருவடியிணையினைப் பற்றுதல் வேண்டும். அதுவே பெரும்பேறென்க புருவநடு-ஆணையிடமாகும். பரங்குருவே பந்தமறுத்த பரம்பொருளாகும். (அ. சி.) சந்திர பூமிக்குடன் - சந்திரமண்டலத்தோடு கூடி. கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னி - இரண்டிதழ்களையுடைய ஆஞ்ஞையில் இருக்கும் சத்தி. பரம் - மேலான. (6) 2614. மனம்புகுந் தானுல கேழு மகிழ நிலம்புகுந் தானெடு வானிலந் தாங்கிச் சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க வனம்புகுந் தானூர் வடக்கென்ப தாமே. (ப. இ.) மெய்யடியார்களின் தூய திருவுள்ளத்தின்கண் சிவபெருமான் புகுந்தருளினன். அங்ஙனம் புகுந்தருளியது ஏழுலகும் மகிழ்ந்து இன்புறும் பொருட்டேயாம். நீண்ட வானிலத்தைத் தாங்கிக்கொண்டு 'இந்த மாநிலத்தே' புகுந்தருளினன். ஆருயிர்களின் கொடுமை கண்டு எட்டுத்திசையும் நடுங்கும் வண்ணம் சினம் கொண்டருளினன். அவனே பேரொடுக்கப் பெருவனத்தின்கண் புகும் பெரும்பொருளாவன். அவனுக்குரிய சிறந்தவூர் தென்றமிழ் வழங்கும் வடபாலுள்ள திருக்கயிலையாகும். திருக்கயிலையில் தென்றமிழ் வழங்குதல் திருமூல நாயனார் பரஞ்சோதி மாமுனிவர் முதலாயினார் பொதியிலினுக்கு அடுத்தடுத்துத் தமிழ் முனிவர்பால் தனித்தமிழ்க் கேண்மையால் வருவதூஉம், நம்பியாரூரர்
1. நின்ற . 12 . வெள்ளானை, 44. " பெருகு. " " 46.
|