1145
 

(ப. இ.) ஆருயிர்கள் சிவபெருமானை நீங்காநினைவுடன் அடிமைத் தொண்டுபுரிவதே அவனை நணுகுவதாகும். அங்ஙனம் நணுகினால் நாதனாகிய அவன் அவ்வுயிரை விட்டகலாது அவ்வுயிர்களைத் தன்பின் நுழையுமாறு பணித்தருள்வன். அங்ஙனமன்றி ஆருயிர்கள் உலகத்தை நினைந்து அதனை அணுகுமாகில் சிவபெருமானாகிய நந்தி அவ்வுயிர்க்கு அகன்று நிற்கும் பெரும்பதியாவன் நன்னெறி நான்மை நற்றவத்தார்க்கு மிகநெருங்கிய மின்னொளிச் சோதியாய்ச் சிவபெருமான் விளங்குவன். அவன் பேரறிவுப் பேரொளி வெளியாவன். அவனை 'அனுசயப்பட்டு அதுவிது என்னாது, கனிமனத்தொடு கண்களும் நீர்மல்கி'த் தொழுதல் வேண்டும். அங்ஙனம் தொழுதால் அவனுடைய திருவடிப் பேரின்பப் பெருநலத்தை ஓரின்பமாக அவனருளால் நுகரலாம்.

(அ. சி.) அமுதம் பருகல் - ஆனந்தானுபவம்.

(8)

2767. புறத்துளா காசம் புவனம் உலகம்
அகத்துளா காசமெம் மாதி யறிவு
சிவத்துளா காசஞ் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துளா காசத்தின் தானஞ் சமாதியே.

(ப. இ.) புறத்துக் காணப்படும் பூதவெளி இருநூற்று இருபத்து நான்கு புவனங்கட்கும், அப் புவனங்கட்கு உட்பட்ட உலகங்கட்கு இடங்கொடுத்துக் கொண்டு நிற்பதொன்று. ஆருயிர்களின் அகத்துக் காணப்படும் அறிவுவெளி ஆதியாகிய சிவபெருமானினதுவாகும். சிவபெருமானின் உள்வெளியாகக் காணப்படுவது அவன்றன் செழுஞ்சுடர்ச் சோதி வடிவமாகும். இச் சோதி வடிவம் அவன்றன் இயற்கை அறிவொளி வடிவமேயாம். நிலவுலகவெளி செயலறலாகிய சமாதியின் இடமாகும். தானம் சமாதி : சமாதித்தானம்; முன்பின்தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை.

(அ. சி.) தானம் சமாதி - நிட்டை கூடும் இடம்.

(9)


10. ஞானோதயம்
(உணர்வுத் தோற்றம்)

2768. மனசந் தியிற்கண்ட மன்னன வாகுங்
கனவுற ஆனந்தங் காண்டல் அதனை
வினவுற ஆனந்த மீதொழி வென்ப
இனமுற்றா னந்தியா னந்த 1மிரண்டே.

(ப. இ.) மனமானது ஐம்பொறிகளுடன் கலந்து ஐம்புலன்களையும் கண்டு அறிவின்பம் எய்துநிலை நனவாகும். இதற்கு இடம் புருவநடு. இங்ஙனம் கண்ட பொருள்களைக் கண்டவாறே அம் மனத் தொடர்பினால் கனவின்கண் கண்டு அறிவின்பம் எய்துதல் கனவாகும். இதற்கு இடம் கண்டம். இத்தகைய நனவின்பம் கனவின்பம் இரண்டும் ஓரின்பமாகக்


1.ஒன்றணையா. சிவஞானபோதம், 4. 3 - 1.