பொருளாம் ஒன்றைச் (1567) சொல்லுவேனென்று மடிதற்றுத் தான் முந்துறும்வாயிலாப் பேதையர்களே! எல்லையில்லாத ஒன்றை எல்லை கண்டுள்ளவாறு சொல்லுவார் யார்? நுகர்வுப் பொருளை நுவலவும் ஒண்ணுமோ! 'ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே' என அடிகளும் அருளி அவனை நுகர்வுப் பொருளென நுவன்றனர். காற்றிலாவிடத்து அலையின் தோற்றம் இன்மையால் முந்நீர் தெளிந்திருக்கும். அதுபோல் சிவனைமறவா நாட்டத்தால் சிந்தை தெளிவார்க்குச் சிவபெருமான் மறைவின்றி அச் சிந்தையினுள்ளே வெளிப்பட்டருள்வன். அவன் பின்னல் திருச்சடையை உடையவன். பின்னல்: புணர்ப்பு; அத்துவிதம். சிவபெருமான் அகல் நிறைவு; ஆருயிர் அமைநிறைவு; மாறுலகு அடக்க நிறைவு. இவை முறையே வியாபகம், வியாப்பியம், வியாத்தி எனப்படும். சடைப் பின்னலும் பெரும்பாலும் தலைமுடியினை மூன்றாய் வகுத்து ஒன்றின்மேல் ஒன்றாய்ப் பின்னல். இதுவே சடை. திருச்சடையின்கண் உள்ள சலமகள் நடப்பாற்றல். வளர்மதி ஆருயிர் ஐவாயரவு மாறுலகு. (2) 2916. மனமாயை மாயைஇம் மாயை மயக்க மனமாயை தான்மாய மற்றொன்று மில்லை பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா தனையாய்ந் திருப்பது தத்துவந் 1தானே. (ப. இ.) மாயையின் தொடக்கு அம் மாயைக்கண் மனம் பற்றினார்க்கே உண்டாம். பற்றாதார்க்கு இன்று. வளர்த்த விலங்கினம் வழிப்படுமாறு போல் சிவனை மறவா மனத்தினர்க்கு மாயையும் வழிப்படும் மனம் சிவத்தில் ஒடுங்கினால் மாயையும் ஒடுங்கி மாயும். மாயை மாயவே வினையும் செருக்கும் நினையாமுன் மாயும், வீடு அழிந்தால் வீட்டுறுப்புக்களும், புழங்கிய பண்டங்களும் பிறவும் உடன் மாயும்; இதற்கிவை ஒப்பாகும். அதுவேயன்றி மாயை இல்பொருள் என்று கூறுவது அடாது. அங்ஙனம் பிதற்றவும் வேண்டா? திருவருள் நினைவால் தனை ஆய்ந்திருப்பதே தத்துவ உண்மையாகும். தத்துவ ஆராய்ச்சி, சோதனை என்பனவும் இதுவே. ஆருயிர்களின் சிவனுக் கடிமை என்னும் உண்மையுணர்தலே தத்துவ வுணர்வால் தன்னை யுணர்தல். இதுவே சாலச் சிறந்ததாகும். (அ. சி.) மயக்க - சங்கற்பத்தை ஒழிக்க. மற்றொன்றுமில்லை - வேறு சாதனம் வேண்டாம். பினை மாய்வதில்லை - அதற்குமேல் மாள்வதற்கு வேறொன்று இல்லை. (3)
1. நானார் என். 8. திருக்கோத்தும்பி, 2. " வேண்டிய நாள். தாயுமானவர், 26. மண், 10. " மண்முதற். உண்மைநெறி விளக்கம், 1.
|