282
 

வியோகம் உடம்பினால் செய்யப்படும் அருமைமிக்க வுழைப்பினால் நிறைவுறும். இவையனைத்தும் எண்வகை யோகத்துள் அடங்கும். கன்மயோகம் - வேண்டி வினைதழுவல்.

(அ. சி.) இருபதி....யோகம் - பலதிறப்பட்ட கன்மயோகங்கள். காய உழைப்பு - தேகத்திற்கு வருத்தம். அரு....அடங்கும் - எட்டு யோகங்களுள் அடங்கும்.

(5)

625. மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.1

(ப. இ.) திங்கட்கலையாகிய இடப்பால் மூக்கின்வழியும், இனம் பற்றி ஞாயிற்றின்கலையாகிய வலப்பால் மூக்கின்வழியும் விடுத்தலாகிய உயிர்ப்புப் பன்னிரண்டு விரலளவு வெளியிற்செல்லும். சென்ற அவ்வுயிர்ப்பில் நால்விரல் அளவு வெளியின்கண்ணேயே வீணாகச் சென்று விடும். எஞ்சிய எட்டுவிரலளவே அகத்துத் தங்கும். அங்ஙனமின்றி அப் பன்னிரண்டு விரலளவு உயிர்ப்பும் அகத்தே தங்கமுயன்று அவை முற்றாகத் தங்கினால் உறுதிப்பாடான எண்சித்திகள் எய்தும். பற்றற: அறப்பற்ற - முற்றுந்தங்க. ஈராறு: இரண்டு + ஆறு = எட்டு; உம்மைத் தொகை. இனம் பற்றி வலப்பாற் (பிங்கல) கலையும் கொள்க. உதயம் - வெளிப்படுதல். திதமான - அழியாமல் நிலையாக இருக்கக்கூடிய.

(அ. சி.) மதிதனில் - இடகலை. மன்னுங்கலை - பன்னிரண்டங்குலமாய்ப் பொருந்தும் பிராணகலை. நால் ஒழிய - 12 அங்குலத்தில் 4 அங்குலம் ஒழிய. ஈராறு - இரண்டும் ஆறும்; எட்டு.

(6)

626. நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்
நீடுந் துரங்கேட்டல் நீண்முடி வீராறே.

(ப. இ.) 'எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்' என்பதனால் நம்முடைய இன சனங்கள் கூடினால்' எண்ணத்தக்க நோய்போன்ற பிறப்பினுக்குக் கட்டுத்துணையாகும். நிலைநிற்கும் கலையுணர்வுகளும், அவ் வுணர்வினைத்தரும் கல்விகளும், அவற்றால் வரும் தெளிவுணர்வும், தெளிவால் பெறப்படும் நுண்ணுணர்வும், ஆகிய பெருமையினால் வாய்ப்பனவல்ல சித்தி வேறுபாடுகள், அவை. 'உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை' என்னும் பொறையினாலும் சிவகுரு அறிவுறுக்கும் செவியறிவுறுத்தலானும் சேர்வன. இத்தகைய யோகப் பயிற்சியின் பேரெல்லை பன்னிரண்டு ஆண்டாகும். மேதை - மறைவிலா அறிவு. கூர்ஞானம் - நிறையறிவு. வாயா - கிட்டா. கேட்டல் - செவியறிவுறுத்தப் பெறுதல்.

(அ. சி.) நஞ்சனம் - உறவினர். வாயா - கிட்டா. துரம் - பொறுத்தல். நீண் முடிவு ஈராறு - யோகாப்பியாச காலம் 12 வருடங்கள்.

(7)


1. ஆகா. திருக்குறள், 478.