631
 

1609. கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்
தூடிற் பலவுல கோரெத் தவரே.1

(ப. இ.) திருவருளோடு கூடிச் சிவத்தைப் பேணுவதாகிய தவத்தைச் செய்து அவன் திருவடியைக் கண்டுகொண்டேன். அத் தவ வழியே சென்று சிவ நிலையையும் கண்டேன். முன்னாக அவ் வுண்மை உணர்ந்தவர் உடல் வருந்தும்படியாகத் தவஞ்செய்யார். ஐம்புலன்களையும் வென்றவர் பலவுலகப் பண்பினராவர். வெல்லாது ஊடி நிற்பவர் ஒரு தவமும் உடையவராகார்.

(அ. சி.) கூடி - மனம் ஒருமைப்பட்டு. வாடி - உடலை விரதங்களால் வாட்டி. இவை களைந்து ஊடில் - இவ்வாறு தவம் செய்வதை விட்டு மாறுபடில். உலகோர் எத் தவரே - உலகினர் எவ்வகைத் தவமும் உடையராகார்.

(4)

1610. மனத்துறை மாகடல் ஏழுங்கை நீத்தித்
தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே.

(ப. இ.) மனத்துக்கு மேலுள்ள இறுப்புமெய் யென்னும் புத்தி தத்துவத்தின்கண் தங்கிக் கிடக்கின்ற கடல்போலும் எல்லையில்லாத எழுவகைப் பிறப்பிற்குங் காரணமாகிய எஞ்சுவினைகளைச் சிவகுருவின் வழித் திருவைந்தெழுத்துக் கணிக்குமுறையில் நீந்தி நற்றவஞ்செய்யும் நல்லாராகிய சிவஞானிகளுடன் இணங்கி அவர்வழி நிற்பார்க்குப் பிறப்பில்லை. அதனால் அவர் பிறப்பினை எய்தார். அந் நல்லார்தம் பணியினைக் கேட்டுத் தொண்டு புரியின், நந்தியாகிய சிவபெருமானை நேராகக் கண்டு அவன் தாளிணைக்கு முந்துதலுமாகும். முகம் - நேர்.

(அ. சி.) மனத்துறை - மனத்தின் பகுதியாகிய நெஞ்சத்திடத்தே பதிந்துள்ள. மாகடல் ஏழுங் கைநீந்தி - சமுத்திரம்போலும் எழுவகைப் பிறவிகளுக்கும் காரணமான விதைகளை நீக்கி. சார்வத்து - கூட்டத்தில். பவத்திடையாகார் - பிறவியில் சேரார். முகத்திடை - நேராக.

(5)

1611. மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்
புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால்
தவத்திடை யாறொளி தன்னொளி யாமே.

(ப. இ.) மனமாகிய உறையினின்றும் மதியாகிய வாளினை (சிவய நம) எடுத்துச் செருக்குச் சினம் சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணா வுவகை ஆகிய ஆறு கோடி மாயா சத்திகளென்னும்


1. நமச்சி. அப்பர், 5. 97 - 22.

" தவஞ் செய்வார். திருக்குறள், 266.

" தேடிக். அப்பர், 4. 9 - 12.