854
 

நினைக்கும். நினைத்து நிலையான கீழைம்பாடு என்று சொல்லக் கீழாலவத்தையை எய்தும். இம் முறையாகச் சென்று சிறப்புநிலை யில்லாத ஐம்பாட்டினையும் எய்தும்.

(அ. சி.) நந்த - மிக. திதமான - நிலையான. கேவலம் - கீழாலவத்தை. பரமாகா - சிறப்பற்ற.

(21)

2124. ஆசான்முன் னேதுயில் மாண வகர்தமைத்
தேசாய தண்டால் எழுப்புஞ் செயல்போன்று
நேசாய வீசனு நீடாண வத்தரை
ஏசாத மாயாடன் னாலே 1எழுப்புமே.

(ப. இ.) உலகியலில் கலைக்கோயிலின்கண் கற்பிக்கும் பொற்புடை நல்லாசான் முன் கற்றற்பொருட்டுச் சென்று உற்றுறையும் நன்மாணவர் பயிற்சிவயத்தால் உறங்குவதும் செய்வர். பேரருள் வாய்ந்த ஆசான் அன்புடைய அம் மாணவரை இன்மொழி புகன்று எழுப்புவன். எழுப்புதற்பொருட்டுப் 'புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்' ஒன்று கையிற்கொண்டருள்வன். அது முறைசெய்யும் செங்கோல் போன்று நிறைநலம் பயக்கும் உரைசேர் புகழ்க்கோலாகும். அதனையே தேசாய தண்டென ஓதினர். அத் தண்டினால் எழுப்புவர். அதுபோன்று சிவபெருமானும் பெருகிய ஆணவப்பிணிப்பினை மருவிச் செய்வதின்ன தென்றறியாது உய்வகை நாடாது மையலுற்றுக் கிடக்கும் ஆருயிர்களைக் குற்றமற்ற தூமாயை என்று சொல்லப்படும் கைக்கருவியால் எழுப்பியருள் செய்வன். அவ்வாறு செய்வது அவ் வுயிர்கள்மாட்டு வைத்தருளிய பேரருளேயாகும். அக் குறிப்பு நேசாய ஈசன் என்பதனால் பெறப்படும். ஆணவப்பிணிப்பினரை நீடாணவத்தர் என்றருளினர். இதன்கண் 'மாணவக' என்னும் அருஞ்சொல்வழக்கு வந்துள்ளமை காண்க.

(அ. சி.) தேசாய - புகழ்பெற்ற. தண்டு - பிரம்பு. நேசாய - கருணை நிறைந்த நீடு - அநாதியே உள்ள. மாயாள் - மாயை.

(22)

2125. மஞ்சொடு மந்தா கினிகுட மாமென
விஞ்சறி வில்லோன் விளம்பு மிகுமதி
எஞ்சலி லொன்றெனு மாறென இவ்வுடல்
அஞ்சுணு மன்னவனன் றேபோ மளவே.

(ப. இ.) நீரும் நீர்க்குடமும் போலும் எனச் சிறந்த அறிவில்லாதவன் இறப்பு மெய்யாகிய புத்தியையும் அதனை இயைந்தியைக்கும் ஆருயிரையும் கூறுவன். அங்ஙனம் கூறுமவன் இரண்டனையும் ஒன்றெனுமாறு கூறிவிடுகின்றனன். அது பொருந்தாது. இவ் வுடலானது ஐம்புலனையும் நுகரும் ஆருயிர் நீங்கினால் தனித்துக்கிடக்கும். அவ் வுயிர் நீங்கும் அளவுமே சேர்ந்திருக்கும் தண்ணீரும் தண்ணீர்க்குடமும் நீங்கினாலும் மீண்டும் இணைந்துகொள்ளும். உயிர்நீங்கின வுடல் அவ்வாறன்று. மஞ்சு - நீர். மந்தாகினி - நீர்க்குடம்.

(அ. சி.) மஞ்சு - மேகம். மந்தாகினி - நீர். மதி - புத்தி. அஞ்சுணு மன்னன் - ஆன்மா.

(23)


1. கிடந்த. திருவுந்தியார், 15.