யிலேயே இயற்கையாக அமைந்த நன்மைப் பண்பாம் என்க. அன்று - தொன்மை. ஆம் - பண்பாம். (அ. சி.) பெருவாய் - பெரிதியதாய். பேதமே பேதித்து - வேறுபடுத்தி. (4) 2443. மணியொளி சோபை யிலக்கணம் வாய்த்து மணியென லாய்நின்ற வாறது போலத் தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற் 1றாயே. (ப. இ.) ஆருயிரானது படிகமணியின் நிறமும் ஒளியும் போன்ற தன்மைவாய்ந்தது அஃதாவது வெண்மை நிறமும் ஏனைய நிறங்களையுட் பற்றியபோழ்து அவ்வந் நிறங்களாகத் தோன்றி ஒளிரும் ஒளியும் உடையது படிகம். அதுபோல் ஆருயிரும் சார்ந்ததன் வண்ணமாக நிற்கும். அஃதாவது ஆணவத்தைச் சார்ந்து அறிவு விளங்காது அறியாமையே தானாக நிற்கும். அருளால் படைத்தளிக்கப்பட்ட ஐம்புலன்களைச் சார்ந்து சுட்டறிவும், அப் புலன்களின் வேறு தான் எனக்கருதும் சிற்றறிவும் உடையவாய் நிற்கும். பின் அருள்வழி ஒழுகி உடல் கலன் உலகுகள் முற்றறிவு பெற்றுச் சிறப்புற்று வாழ்வதற்குச் சிவபெருமானால் அளிக்கப்பட்ட அருட்கொடை இரவல் பொருள்கள் என்றுணர்தல் வேண்டும். சிவகுரு எழுந்தருளித் திருவைந்தெழுத்தினைத் தேறுமாறு உணர்த்தியருள்வன். அருளவே முற்றறிவு பெற்று முழுமுதலடிக்கீழ்க் கெழுமி விழுமிதாய் வாழும். இவையே ஆருயிர்கள் சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் ஆருயிர்த் தன்மையாகும். ஆருயிர் விழுப்பேறாம் சிவபெருமான் நிலையினை எய்தும். சிவபெருமானைச் செம்மணியாகச் செப்புவர் செம்பொருட்டுணிவினர். ஆருயிராம் பளிங்கும் செம்மணியாம் சிவனைச் சாரப்பட்டுச் செம்மணியாகத் திகழும். இவ் வொப்பினைப் படிகத்தின் மேலேற்றிப் படிகம் நிற்குமாறுபோல ஆருயிரும் அடங்கி நிற்கும். அந்நிலையினை ஆருயிர் நிலை, அருள் நிலை, அருளோன் நிலை எனக் கூறுவர். இவையே முச் சொரூபமாகும். அவ்வுயிர் அறிவுப் பேராற்றலாகிய சத்தியாதியைச் சாருமாறு சிவபெருமான் பணித்தருளினன். அங்ஙனம் பணித்தருளிய பெரும் பொருட் கிளவியாம்2 நந்தியின் திருவடியிணையினை நெஞ்சமே பற்றற்று இடையறாது பற்றுவாயாக. (அ. சி.) சோபை - ஒளி உதயம். தணி - பொருந்தியுள்ள. (5) 2444. கல்லொளி மாநிறஞ் சோபைக் கதிர்தட்ட நல்ல மணியொன்றி னாடியொண் முப்பதம் சொல்லறு முப்பாழிற் சொல்லறு பேருரைத்து அல்லறு முத்திராந் தத்தனு பூதியே. (ப. இ.) ஒளியுடைத்தாகிய படிகத்தின்கண் வைக்கப்படும் சிறந்த பலநிற மணிகள் பொருந்தவைத்தால் தன்னால் சாரப்பட்ட மணியின்
1. வந்தெனுடல். தாயுமானவர், ஆகார - 18. " சார்புணர்ந்து. திருக்குறள், 359. 2. கரும்பினும். அப்பர், 4. 74 - 3. " சிரிப்பார். 8. கோயின்மூத்த, 9.
|