1013
 

(ப. இ.) சிவபெருமானின் திருப்புகழ் ஒன்றே இறைவன் பொருள்சேர் புகழ் ஆகும். அவன் திருவடியுணர்வே என்றும் மாறாது பொருந்திய ஒப்பில்லாத சிவஞானமாகும். அவன் திருவடியின்பே 'திருவாசகமென்னும்தேன்' என ஓதுவதனைய வழுவில் செழுந்தேன் ஆகும். இதனையே இனிய அமிழ்தெனவும் கூறுப. இம் மூன்றும் ஒருபுடையொப்பாக உண்மை அறிவு இன்பமென இசைக்கலுமாம். இவை நிலைத்திருக்கும் நிலைக்களம் அகத்துக் காணப்பெறும் சிறு வரையாகும். சிறு வரை: மேரு என்னும் பொன் மலையாகும். அதுவே புருவநடுவென்ப. புருவநடுவினை மேருவென்றும், முதுகெலும்பினை மேருத்தண்டமென்றுங் கூறுப. இவ்வுண்மையினைக் குறைபாடு ஏதுமின்றி உணர்ந்து ஒழுகுதலைச் செய்யும் மெய்யன்பர்களுக்குச் சிவவுலகத்தின்கண் சிறந்த இடத்தை அமைத்துத் தரும் சீரிய ஆண்மையன் சிவபெருமானாவன். ஆண்மையன் எனினும் மறவன் எனினும் வீரன் எனினும் ஒன்றே.

(அ. சி.) தேன் - அமிழ்தம். சிறுவரை - புருவமத்தி, மேரு. மறவன் - உருத்திரன்.

(12)

2484. மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்
தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்கு
ஆமல மற்றார் அமைவுபெற் றாரன்றே.

(ப. இ.) மண்டையின் ஆணைக்கண் விளங்கும் திங்களின் மதியிடத்துத் தாம் அறிவாய் நிலைநின்றவர் அகப்பெருந்தவத்தோராவர். தூயமதியாகத் தம் மதிக்கும் மதிகொடுப்பவன் பேரின்பமான சிவபெருமானாவன். அவன் மதியே தம் மதியாக உலகினைத் தம்மிடத்திருப்பதாக நுகர ஒழிவொடுக்கம் புகுந்த நினைவினர் ஒண்மையராவர். ஒழிவு - உபசாந்தம். அவரே மீண்டும் பிறப்புக்கு ஆம் பெருமலம் அற்றோராவர். திருவடிக்கீழ் அமைவுபெற்ற மெய்யன்பருமாவர்.

(அ. சி.) மாமதியாம் - ஆஞ்ஞையிலுள்ள சந்திரனிடத்துள்ளதாம். மதியாய் - அறிவாய். தா மதியாக - தாம் அறிவுருவாக. சகமுண - உலகம் தம்மிடத்து இருப்பதாக. சாந்தி - உபசாந்த நிலை.

(13)

2485. பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளைத் துரந்து
மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் 1தாமே.

(ப. இ.) அயன் அரி அரனாகிய மூவர்வாழ் உலகப்பேறுகள் பதமுத்திகள் என்று சொல்லப்படும். அவை துன்பம் தருவன. மீட்டும் பிறப்பினுக்கு ஆளாக்குவன. ஆதலால், அவற்றைக் காணவேண்டு மென்னும் கருத்துக்கூடச் சிவனடியார்கட்குத் தோன்றுவதில்லை. அவற்றைப் பழுதென்று கைவிட்டகல்வர். இஃது என்னும் சுட்டிற்குப் புலனாகக் கூடிய மாயாகாரியப்


1. அண்டர். திருக்குறள், 5. 39 - 3.

" கொள்ளேன். 8. திருச்சதகம், 3.