வுயிர்ப்பின் இறுதிக்கண் விளங்கியருள்பவன் சிவபெருமான். அஃது அவன் இருப்பிடம் என்னும் உண்மையினை யாரும் அறியார். அங்ஙனம் இருப்பதாகப் பெருமறை பேசியிருக்கும். எனினும் அறுதியிட்டுக் கூற நாணியிருக்கின்றது. இதுவே அம் மறையின் குணமாகும். (அ. சி.) நாசி நுனியில் - மூக்கு நுனியினின்றும் வெளிப்படும் பிராணவாயுவில். நான்கு மூவிரல் - பன்னிரண்டு விரற்கடையில். கூசி இருக்கும் - கூறமுடியாமல் நாணிஇருக்கும். (1) 2507. கருமங்கள் 1ஒன்று கருதுங் கருமத்து உரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிக்கு அருவினை யாவது கண்டகன் றன்பிற் புரிவன கன்மக் கயத்துட் 2புகுமே. (ப. இ.) ஆருயிர் செய்யும் இருவினையாகிய கன்மங்கள் பொருந்தும் கருத்தினால். அங்ஙனம் கருதுகின்ற கருமப் பயனின் உரிமையும், மீண்டும் பிறவிக்கு வித்தாம் கன்மமும் கருதப்படுகின்ற பிறவிக்கு அருவினையாகும். திருவருளால் இவ் வுண்மை கண்டு அகன்ற பின்பு யான் என தென்னும் செருக்காம் தன் முனைப்பற்று ஆண்டானுக்கு அடிமையாம் அருள் முனைப்புடன் செய்வன அனைத்தும் இறைபணியாகும். இப் பணியால் கன்மக் கயமாகிய வினை நீக்கத்துள் அவ் வுயிர் புகும் என்க. கயம் - தேய்வு; குறைவு. (அ. சி.) பிறவிக் கருவினை - பிறப்புக்கு மூலத்தை. கன்மக் கயத்துட்புகாமே - கன்மமாகிய குளத்துள் மூழ்காமல். (2) 2508. மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் 3லார்கட்குக் காயமும் இல்லை கருத்தில்லை தானன்றே. (ப. இ.) மாயாகாரிய உலகங்களாலும் உலகியற் பொருள்களாலும் உடலாலும் மருள் கொண்டு தெருள் நாடாது உழலும் ஆருயிர் மாயையால் மறைக்கப்பட்ட நிலையினதாகும். அம் மறைப்புக்கு உட்பட்டமையால், செந்தமிழ்த் திருமறையால் சிறந்தெடுத்து ஓதப்பெறும் மறை பொருளாம் 'தென்னாடுடைய சிவனை' உன்னாதிருக்கின்றது. அதனால் அச் சிவன் மறைபொருள் எனப்படுகின்றனன். மாயையின்பாற் கொண்ட மருள் மறையத் திருவருள் நினைவாம் தெருள் தோன்றும். அது தோன்ற அம் மறைபொருளாகிய சிவன் வெளிப்படுவன். மாயையின் மருள் தோன்றாது மறைதலினால் அத்தகையோர் சிவபெருமான் திருவடிக்கீழ் ஒடுங்குதலாகிய மறையவல்லாராவர் அவர்கட்கு இனிப்
(பாடம்) 1. ஒன்றுட். 2. அவனே. சிவஞானபோதம், 10. " அருளினா. சிவஞானசித்தியார், 2. 2 - 20. " யான்செய்தேன். " 10. 1 - 1. 3. மரத்தை. 10. திருமூலர், 2251.
|