1237
 

(ப. இ.) நன்னெறிநான்மை (2615) நற்றவத்தால் திருவருள் வீழ்ச்சி எய்தப்பெறுவர். அங்ஙனம் பெற்றவர் மனம் திருவருளியிலில் விரியும். பின்பு திருவடியியலின்கண் வேட்கையுண்டாகும். வேட்கையுண்டாகவே அடியேனைப் 'போக்கருளீர்' என்று முறையிட நேரும். நேரவே திருவடிப் பெருவாழ்வின்கண் உள்ளம் குவிதலாகிய ஒடுங்குதலை எய்தும். இவ் வுண்மை வரும் திருநெறிய தமிழான் உணர்க.

"தக்கிருந் தீரன்று தாளா லரக்கனை
உக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே."

(3 - 125. 8)

"பாடிப் பலநாள் பயின்றதற்பின் மூவரடி
நாடினரே நம்மடிகள் நாயனருள்-கூடியதும்
வீடே விழைந்துள்ளார் வேண்ட இருந்தஅவர்
ஏடே முழுக்கனிவாம் இங்கு."

என்பதனையும் நினைவு கூர்க.

அந் நிலையின்கண் உறைத்து நின்றார்க்கு இயல்பாகவே உரை மாண்டகலும். அதனால் உயிர்ப்பு ஒடுங்கும். முன் உயிர்ப்பின்கண் விரிந்தமனம் இப்பொழுது குவிந்து ஒடுங்கும் திருவடியின்பின்கண் நிலைபெற்ற ஆருயிரின் மனம் திருவருளியலில் விரிந்தநிலை நீங்கி திருவடியியலின்கண் ஒடுங்கும். உரைமாண்டதொன்றை உரைமாண்ட நிலையிலேயே எய்துதல் ஏற்புடைத்தாகும். உடைமாண்டதொன்று - மாற்றம் மனங்கழிய நிறை மறையோன். உரைமாண்ட நிலை-மேன்மை ஞானமாகிய மோனநிலை.

(23)


21. தோத்திரம்
(புகழ்வு)

2940. மாயனை நாடி மனநெடுந் தேரேறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடுந் திரிந்தெங்கள் செல்வனைக்
காயமின் னாட்டிடைக் கண்டுகொண் 1டேனன்றே.

(ப. இ.) மாயை நிலைப்பதற்குத் தாரகமாகிய நிலைக்களமாக இருப்பவன் சிவபெருமான். அவன் அந் நிலையின்கண் மாயன் என்று


1. நாடி. அப்பர், 5. 1 - 10.

" தேடிக். " 4. 9 - 12.

" வெள்ளத் " 5. 98 - 3.

" விண்ணினார். " " 46 - 5.

" ஈசனீசனென். " " 93 - 3.

" விண்ணி. " " 46 - 5.