1254
 

ஆனதால் உள்ளவனும் அல்லன். கல்லது நெஞ்சம் - கல்போன்ற வலிய நெஞ்சத்தாரையும். பிளந்திடும் - உருகச்செய்யும். காட்சியான் - உருவமுடையவன்.

(32)

2972. உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனுங்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற் பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் 1றானன்றே.

(ப. இ.) சிவபெருமான் 'நும்பின் எம்மை நுழையப் பணியே' என்னும் நற்றவநிலை பெற்றிலாதார்க்கு அவர்தம் உள்ளத்து அடங்கிப் புலனாகாதிருப்பன். இஃது 'அருக்கன் நேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்கு, இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன்' என்னும் பொருள் நூல் அருள்மொழியினை யொக்கும். புறத்தேயும் அவ்வுயிர்கள் நான் என முனைத்திடுமாறு 'அவையே தானேயாய்' நிற்பன். அவன் 'கரவாடும் வன்நெஞ்சர்க்க அரியான். கரவார்பால் விரவாடும் பெருமான்' ஆதலால் 'கள்ளத் தலைவன்' என அழைக்கப்படுவன். அவன் நறுமணம் கமழும் கொன்றை மாலையணிந்த பின்னுதலமைந்த திருச்சடையினையுடையவன். நந்தியென்னும் திருப்பெயரினையுமுடையவன். அவனே 'பொன்னும் மெய்ப் பொருளும் தருவானாகிய' பெருவள்ளல். அவனை நீங்காநினைவுடன் அவன் திருவருட்பாங்காய் ஒழுகவல்லார்க்கு வழுவிலா வாய்மைப் பெருமானாவன். அவர்தம் 'அவாவெனும் தவாப் பிறப்பீனும் வித்து' முளைத்தற்குத் தக்கதாகிய அள்ளலாம் சேறுசேர் பிறவிப் பெருங்கடலை ஒருங்கறுத்தருளினன். விரவாடும் பெருமான்: விரவியாடும் பெருமான்.

(அ. சி.) வழக்கம் செய்வார்கள்தம் - சிந்திக்கின்றவர்களுடைய அள்ளல் கடல் - துன்பக்கடல்.

(33)

2973. மாறெதிர் வானவர் தானவர் நாடொறுங்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத் தகத்தும் புறத்துளும்
வேறுசெய் தாங்கே விளக்கொளி யாகுமே.

(ப. இ.) இன்ப வேட்கையராகிய வானவரும் பொருள் வேட்கையராகிய தானவரும் என்றும் தம்முண் மாறுபட்டு ஒருவரோடொருவர் மாறாப் போரிடுவர். அப் போரின்கண் வெற்றியுற்றார் திளைப்பர். தோல்வியுற்றார் இளைப்பர். இளைத்தவர் மீண்டும் வென்று திளைத்தற் பொருட்டுச் சிவபெருமான் திருவடியிணையினை நாளும் வழிபடுவர். இவ்வுண்மை, 'வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான், மனம் நின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டி' என்னும் செந்தமிழ் மறைமுடிவான உணரலாம். இவ்விரு திறத்தாரும் ஒழிந்த அறநெறிப் பேற்றினராகிய மனிதர் உள்ளங்கனிந்து ஊற்றெடுத்து வாழ்த்தி வணங்குவர். அவர் உள்ளத்தகத்தும் புறத்தும் சிவபெருமான் வெளிப்பட்டருள்வன். அவ்வெளிப் பாட்டால் அவை சிறந்தனவாகத்


1. தனியனேன். 8. திருச்சதகம், 27.