161
 

352. பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

(ப. இ.) வானவர்கள் தாம்வாழ வாழ்த்தும் பண்பினர். அதனால் அவர்கள் செய்யும் வழிபாடு ஆசைவழிபாடாகும்; அன்புவழிபாடாகாது. ஆதலால் நற்பண்பை அகற்றிய வழிபாடு என்று ஓதப்பட்டது. அத்தகைய வழிபாட்டைச் செய்து கண்ணுக்கு ஒப்பாகப் புகழ்ந்து கூறப்படும் செந்தாமரையில் இருக்கும் நான்முகன் உடனொத்த மாலுடன் நண்பு கொள்ளாது செருக்கால் நண்பைக் கெடுத்தவனுமாகின்றனன். இருவரும் திருவாணையின்வழிப் படைத்தல் காத்தல்களை முறையே செய்யும் பண்பினர். அதனால் உடனொத்தவராவர். அங்ஙனம் செருக்குக் கொண்ட நான்முகன் தலை ஒன்று அறுக்கப்பட்டது. தலையறுப்ப தென்பது தலைமை யறுப்பதென்பதாகும். அத் தலைமண்டையில் ஏனை விண்ணோரும் செருக்குற்று மாளாது பண்புற்று வாழும் வண்ணம் அவர்தம் குருதிப் பலியினை ஏற்றனன் சிவன்.

(அ. சி.) பண்பழிசெய் வழிபாடு - தகுதி அற்ற வணக்கம். நண்பழியாளன் - அயன். விருத்தி - ஐயம்.

(5)


6. சக்கரப் பேறு

353. மால்போ தக1னென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்போக மேழும் படைத்துடை யானே

(ப. இ.) தூமாயையின்கண் வாழும் முக்குணம் கடந்த அரியும் அயனும் வேறாவர். மூலப்பகுதியிலுறையும் முக்குணம் அடர்ந்த அரியும் அயனும் வேறாவர். அரி அயனை முறையே மால் அயன் எனவுங் கூறுவர். முக்குணம் கடந்த மால் முக்குணம் அடர்ந்த மாலுக்கு முதல்வனாவன். பெயரொற்றுமையால் உலகோர் மயங்குவதன்றி அந்த மாலே மயங்கிச் செருக்குறுகின்றனன். சிவ வழிபாட்டினர் அருளோன் அனந்தன் மணிகண்டன் அம்மை, பொருட்சேய் அரி அயன்தாள் போற்றிச் சிவகுருவாகக் கொண்டு சிவபூசை புரிவர். முக்குணம் அடர்ந்த அம் மால் நம்மைப் போதக ஆசிரியனாக உலகங் கொள்கின்றது. இத்தகைய வண்மை வேறு யாவர்க்குளது? எனப் பிழைபட நினைத்தனன். இந் நினைப்பால் அம் மாலுக்குப் போக்கவொண்ணாச் செருக்கு மூடிவிட்டது. அச் செருக்குத் தலைக்கு மேலேறி விண்ணிலே பரந்தது. அதனால் அம்மாலின் சக்கரம் தானிருந்த அம் மாலின் கையோடு விண்ணிலே பறந்தது. 'சக்கர் நெறிநில்' லாதார் கையில் சக்கரம் எவ்வாறு


1. ஆரண. சிவஞான சித்தியார், 1 . 2 - 18.