கலந்துள் இருந்திடும். கல் - மணி. அம் மாயையினை இத்தகைய உறுதிப் பொருள்களாகச் சத்தியின் இடமாக நின்று ஆக்கியருளிய அப்பெரும் பொருள் புகழ்ச்சி மொழிகளுக்கு எட்டாத தொலைவிலுள்ளதாகும். இல்லது - மாயை; அது முதற்பொருளீறு. 'இல்லே எனும் மாயையிலிட்டென்னை' என்பதுங் காண்க. வல்லது - உறுதியானது. (அ. சி.) இல்லது - மாயை. வல்லது வழி ஆக - மாயை மூலமாக. சொல்லது - புகழ். தூராதி தூரம் - விரிவுடையது. (3) 371. தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும் சார்வத்துச் சத்திஓர் சாத்துமா னாமே.1 (ப. இ.) மாற்றம் மனங்கழிய நின்ற மறையோன் சிவன். அவன் தொலைவில் தோன்றும் சுடர்ச் சோதியாயுள்ளான். அன்பினால் அவனைத் தொடர்ந்தொரு சத்தி தோன்றிற்று. அச் சத்தியின் ஆர்வத்தால் நாதந்தோன்றும். அந் நாதத்தின்பின் விந்து தோன்றும். அதன்பின் அறிவும் ஆற்றலும் ஆகிய சிவம் சத்தி என்னும் இரண்டும் ஒப்ப நிற்கும் நிலையாகிய அருளோன்மெய் சதாசிவம் எனப்படும். பெருமை மிக்க அச் சதாசிவமெய் அதன்பின் தோன்றும். நிலமுதலாகிய பூதம் ஐந்திற்கும் சார்பிடமாய் நிற்பது சத்தியென்னும் பேரறிவுப் பெரும்பொருள். அச் சத்தியையுடைய பெரும் பொருள் ஒப்பில்லாத சிவன் எனப்படும் சாத்துமான் என்க. இதுவரையும் தூமாயையாகிய விந்துவின் நிலைவேறுபாட்டு நிகழ்ச்சி முறைகளாகும். இம்முறை ஒன்றினின்று ஒன்று தோன்றுவதன்று. வீட்டில் பல அறைகள் தடுக்கப்படுவதுபோல் அமைப்பதாகும். இதனைப் பகுப்பமைப்பு என்ப. இதுவே விருத்தியெனவும் படும். படம் குடிலானாற்போல என்பதும் இது. பாரம் - பெருமை. வத்து - பொருள். (அ. சி.) சத்தி ஓரா வத்து மானும் - ஆராய்ந்தறியப்படாத பரம்பொருளைச் சத்தி ஒக்கும். (4) 372. மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும் கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த் தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்2 பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.3 (ப. இ.) மோகினி என்பது தூவாமாயைக்கு ஒரு பெயர். அத்தூவா மாயையில் கலை தோன்றும். அக் கலையினின்று மூலப்பகுதி தோன்றும். இம் மூலப்பகுதிக்கு மான் என்று பெயர். பின் மூலப் பகுதியில் தோன்றும் இறுப்பு மெய்யாகிய புத்தி தத்துவத்திற்கும் மான்
1. சிவஞ்சத்தி. சிவஞான சித்தியார், 2. 4 - 2. 2. வருங்குண - சாற்றிய "2. 3 - 7 - 15. " சுவையொளி, திருக்குறள், 27. 3. சாந்தியா. சிவஞானசித்தியார், 8. 1 - 9.
|