211
 

460. வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.

(ப. இ.) நடப்பாற்றலாகிய ஆதி மாதுநல்லாள் எனப்படுவள். அவள் ஆருயிர்கட்கு வினைக்கீடாகப் பிறவியை வகுத்தருளினள். வனப்பாற்றலாகிய திருவருள் சோதி நல்லாளாகும். அவள் வழியாக அருட்பெரும் சோதியாகிய சிவபெருமான் ஆருயிர்களின் இருளாகிய அறியாமையை நீக்கியருள்வன். அச் சிவபெருமான் பலவாகிய உயிரினங்களை மாதுநல்லாளாகிய ஆதியாற்றல்வழிப் பகுத்துணரச் செய்தருள்வன். அங்ஙனம் அமைத்தருளின சிவபெருமான் உயிருக்குயிராய் உண்ணின்றுணர்த்திச் சிறப்பருளினன் என்க.

(25)

461. மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.1

(ப. இ.) மூலத் தீயின் சார்பாக வளர்கின்ற கருவினை வெளிப்படுமுன் ஆண் பெண் அலியெனக் காண்பது கற்பனையாகும். பேரொளிப் பிழம்பாம் அருட்பெரும் சோதி தன் அறிவாண்மையால் கருவுற்ற உயிரின் தாய்தந்தை வழி நிழல்போல் அமைத்தருளினன். தாயைப் போன்று பிள்ளை என்பதனால் உடலமைப்புப் பெரும்பாலும் தாயுடம்பைப் போன்றதாகும். 'தந்தையறிவே மகனறிவு' 'தந்தைய ரொப்பர் மக்க' ளென்பதனால் உணர்வின் வளர்ச்சியமைப்புப் பெரும்பாலும் தந்தையின் உணர்வினைப் போன்றதாகும். தீப்பிழம்பாம் இறைவனை ஆண் பெண் அலி என்றல் கற்பனையாகும் என்றலும் ஒன்று. இங்ஙனம் குறிப்பது சார்புத்தன்மையாகும். சார்பு - தடத்தம்; பொது. ஆம் பதி - அமைத்தவுடம்பு. ஆண்மை - காக்குந்தன்மை.

(அ. சி.) வழிபோல - சாயல் போல.

(26)

462. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

(ப. இ.) காதலரிருவரும் மருவிப் பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்குமுயிர் ஆணாகப் பிறக்கும். பெண்ணாகிய இடப்பால் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்குமுயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாக இருக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுதியாகவிருந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகப் பிறக்கும். அச் சிறப்புடன் பிறந்த உயிர் 'உழையார் புவனம் ஒருமூன்று' மொருங்குடன் ஆளும். அகப் பயிற்சியால் விந்து கட்டுப்பட்டுத் திண்மை


1. மண்ணல்லை. அப்பர், 6 - 45 - 9.

" நல்லாண்மை. திருக்குறள், 1026.