8. ஆதார வாதேயம் 1131 .நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு தானித ழானவை நாற்பத்து நாலுள பாலித ழானவள் பங்கய மூலமாய்த் தானித ழாகித் தரித்திருந் தாளே. (ப. இ.) நாலிதழ்கொண்டது மூலம். ஆறிதழ்கொண்டது கொப்பூழ். தொண்ணூறு இதழ்கொண்டது மேல்வயிறு. நாற்பது இதழ் கொண்டது நெஞ்சகம். பதினாலு இதழ்கொண்டது மிடறு. பத்திதழ் கொண்டது புருவநடு. இவையனைத்தும் தாமரைப் பூவாக உருவகிக்கப்படும். திருவருளம்மை இவ்விடங்களில் நின்று இயக்குவள். பால் - பக்கம்; பத்து. (அ. சி.) ஆறு ஆதாரங்களின் இதழ்களையும் அவற்றின் பீச எழுத்துக்களையும் பற்றி இப் பாட்டுக் கூறுகின்றது. ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு - தொண்ணூற்றாறு புற தத்துவங்கள். தானிதழாகி - இதழ்களாயுள்ளவை ஆதார சத்திகளாகி. (1) 1132 .தரித்திருந் தாளவள் தன்னொளி நோக்கி விரித்திருந் தாளவள் வேதப் பொருளைக் குறித்திருந் தாளவள் கூறிய ஐந்து மறித்திருந் தாளவள் மாதுநல் லாளே.1 (ப. இ.) திருவருளம்மை தன் உயிர்க்கு உயிராய் ஒளியாய் விளங்கும் செம்பொருளாம் சிவனையே நோக்கி நின்றனள். அவன் திருவுள்ளப்படி மறையும் முறையுமாகிய வேதாகமப் பொருள்களை விரித்தருளினள். படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் உள்ளக் குறிப்பால் உஞற்றியருளினள். தோற்றுவித்தருளினமை போன்று ஒடுக்குங்காலத்து அவற்றை முறையே ஒடுக்கியருளினள். அதனால், அவ்வம்மை மாதுநல்லாள் என வழுத்தப்படுவாளாயினள். (அ. சி.) தன்னொளி - சத்தி தங்கிய சிவ ஒளி. விரித்திருந்தாள் - வெளிப்படுத்தினாள். மறித்திருந்தாள் - ஒடுக்கி இருந்தாள். (2) 1133 .மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப் பாதிநல் லாளும் பகவனு மானது சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.2 (ப. இ.) மாது நல்லாளாகிய திருவருள் தன் மணாளனாகிய சிவன் தன்மெய்யினில் செம்பாதிகொள்ள இடங்கொடுத்துப் பாதி நல்லாளா
1. வான்கெட்டு. 8. திருத்தெள்ளேணம், 18. " இருநிலனதுபுன. சம்பந்தர், 1. 23 - 7. 2. பாடுவார். ஆரூரர், 7. 29 - 3. " அகரமுதல. திருக்குறள், 1.
|