(ப. இ.) பண்டைப் பயிற்சிகொண்ட வுளத்தால் வேட்கை யுற்றாலும் விந்துவினை வெளிவிடாது உள்ளடக்கி நுகர்ந்து இன்புறும் நன்மையரும் உளர். அவர்கள் வருமாறு: யோகியும், ஞானியும், தலையாய சித்தனும், தலையாய யோகியும், தலையாய ஞானமுதல்வனும் ஆவர். இவ் வைவர்களும் எஞ்ஞான்றும் விந்துவினை மைந்துடன் காக்கும் தலைமையராவர். (14) 1914. அண்ணல் உடலாகி யவ்வனல் விந்துவும் மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவுங் கண்ணுங் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து உண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே. (ப. இ.) அகத்தவ யோகியர்க்கு ஏனையார்க்கு உயிர்க்குயிராய்த் திகழும் அண்ணலாகிய சிவபெருமான் உடலாய்த் திகழ்வன். அங்ஙனம் திகழ்வதால் விந்து மாயையாகிய அனற்பிழம்பும் மண்ணிடை வீணாக் கழிப்பின் மாயச்செய்யும் உயிர்விந்துவாகிய அனற்பிழம்பும் கருதப்படும் மூலக்கனலுடன் கூடிக் கலந்து ஒப்பில் பேரொளிப்பிழம்பாய்ச் சுடர் விட்டு அகத்தமிர்தாகி யோகிக்குத் தாவில் அறிவாகும் என்ப. (அ. சி.) கண்ணுங்கனல் - மூலாக்கினி. (15) 1915. அறியா தழிகின்ற வாதலால் நாளும் பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள் அறிவாய் நனவி லதீதம் 1புரியச் செறிவா யிருந்து சேரவே மாயுமே. (ப. இ.) மேலோதிய உண்மையினை அருள்வழி நின்று அறியாது நாளும் விந்து அழிந்து பொறிவேட்கைக்கு உட்பட்டுப் பலர் புலம்புகின்றனர். அருளால் அறிவுடையராய் நனவிலே சிவ நினைவன்றி ஏதும் உணரா உயிர்ப்படங்கலாகிய அப்பாலைப் புரிந்தோர்க்குத் தூமாயை விந்துவும் உயிர்விந்துவும் ஒன்றாய்க் கூடிக் கட்டுப்பட்டு நிற்கும். அதீதம் - அப்பால். (அ. சி.) பொறியால் - அடக்காத ஐம்பொறிகளால். செறிவாய் - இரண்டு விந்துக்களும் கலந்து. மாயும் - கட்டுப்படும். (16) 1916. மாதரை மாய வருங்கூற்ற மென்றுன்னக் காதல தாகிய காமங் கழிந்திடுஞ் சாதலு மில்லை சதகோடி யாண்டினுஞ் சோதியி னுள்ளே துரிசறுங் காலமே.2 (ப. இ.) பிறப்பற்றுச் சிறப்புற்று வாழநினையாத உருவால் மட்டும் பெண்ணாய்த் தோன்றும் மாதரைத் தங்கட்கும் பிறர்க்கும் வருங்கூற்றம் என்று எண்ணுதல்வேண்டும். அங்ஙனம் எண்ணினால் நேர்மையும்
1. சாக்கிரத்தே. சிவஞானசித்தியார், 8. 2 - 15. 2. பெண்ணியலார். திருக்குறள், 1311.
|