803
 

(ப. இ.) ஈசத்துவம் என்று சொல்லப்படும் படைப்பாதி ஐந்தொழில் தன்மையையும் கடந்து மேல் ஒன்றும் இல்லையென்றும், அதன்பின்பு உற்று நோக்கும்போது எல்லாம் பாசமாகிய மாயையின் காரியத்துள்தான் என்று உயிர் நினைக்கும். அதுபோன்று நினைக்கும் எனக்கு அடியேனின் அன்புள்ள நெஞ்சத்து எழுந்தருளும் சிவபெருமான் அண்ணலாகிய தன்னையும், தன்னால் புரக்கப்படும் உலகத்தையும் பிறவற்றையும் என்னுள்ளே தெளியக் காட்டியருளினன். அச் சிவபெருமானே எம்தலைவனாவன். அவனே இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய தூயோனாவன்.

(அ. சி.) ஈசத்துவம் - ஐந்தொழில்.

(15)

2026. மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொ னின்றங் கமுதம் விளைந்தது
பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள்
ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.

(ப. இ.) செம்மணி ஒளிக்கற்களின் கதிர்வரிசைகள்போல் விரிந்து பரவி ஒளிவிடும் மண்டலம் புருவநடுவாகும். 'மாற்றறியாத செழும் பசும்பொன்'னாகிய சிவபெருமான் அப்பால் நிலையாம் ஆறிரண்டு சேர் ஈறில் அறிவுப்பெருவெளியில் நின்றருளுகின்றனன். அதனால் திருவடிப் பேரமிழ்தம் பெருகி விளைந்தது. அவ் வமிழ்தினைத் திருவருளால் 'சிவசிவ' என மாறாது மறவாது துறவாது உணர்விற் கணித்தலாகிய பேணுதலைப் புரிந்து உண்டுகொண்டிருக்கும் நற்றவத்தினர் பிறப்பற்றிருந்த நல்லோராவர். இவ் வுண்மையினை உணர்ந்து உரனுடன் ஒழுகாப் புலனுகர் மாக்கள் எல்லாம் 'துயிற் சுவையும் தூநல்லார் தோள்சுவையும்' தந்து மயலாக்கும் அயிற்சுவையாம் ஊணுண்டு வாழும் வீணுக்கிருந்தனர்.

(அ. சி.) மாணிக்க மாலை - மணி ஒளி போன்ற கதிர் ஒளிக்கூட்டம். ஆணிப் பொன் - பொன்னம்பலம் - உச்சித்தாமரை. ஊணுக்கு சோற்றுக்குக் கேடாய்.

(16)

2027. அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற் றீங்கறு மாறே
அசைத்திரு மாயை அணுத்தானு மாங்கே
இசைத்தானு மொன்றறி விப்போன் 1இறையே.

(ப. இ.) அசத்து என்று சொல்லப்படும் அறிவில் பொருள்களும், அவ் வறிவில் பொருளாகிய உடலுடன் சேர்ந்து உலவும் சத்தாகிய அறிவுப்பொருளாம் உயிரும் தனித்தனி நிற்பின் ஏதும் பயனின்றாம். அசத்சத்து என்னும் அறியாமையோடு கூடிய அறிவுத்தன்மையாம் உயிர்மை பசுத்துவம் எனப்படும். பசுத்துவத்தைப் பிணிமை எனவுங் கூறுப. ஈண்டு அசத்சத்தென்று ஓதினர். அவ் வசத்சத்தாகிய அனைத்தும் அருளால் நீங்குதல்வேண்டும். நீங்கவே தொன்மைய என்று நன்மையுணர்ந்தாரால் இசைக்கப்படும் பாசப்பற்று இங்கு அறும்.


1. அறியாமை. சிவஞானசித்தியார், 8. 2 - 20.