2770. உண்ணல் உறங்கல் உலாவல் உயிர்போதல் நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப் பண்ணல் அவன்பணி யாலிவன் பாலிடை திண்ணிதிற் செய்கை சிவன்பணி 1யாகுமே. (ப. இ.) ஆருயிர்களுக்குத் திருவருளால் நிகழும் உண்ணலும், உறங்கலும், உலாவுதலும், அவ்வுயிர்க்கு அன்பறிவாற்றல்களின் நிகழ்ச்சி கைகூடுவதாகிய போதம் பொருந்தல்களும் நிகழ்கின்றன. இவற்றால் இருவினை நிகழ்வு ஏற்படுகின்றது. அவ்வினைப் பயனின் பகுதி நுகர்வை ஒளியுலகத்தும் இருளுலகத்தும் இயைந்து நுகருமாறு நாட்டுதலைச் செய்தலும் நிகழ்கின்றது. அனைத்தும் சிவபெருமான் திருப்பணியேயாகும். அச் செயல்களைச் செய்யும் உயிர் சிவனை மறவாத உறவுள்ளத்துடன் அறம் எனக் கருதிச் செய்தல்வேண்டும். அப்பொழுது அது சிவன் பணியாவதற்கு ஏதும் ஐயுறவுவின்று. உடலை நீங்கியவுயிர் 'இருவிசும்பு ஏறும்.' இருவிசும்பு: ஒளியுலகு, இருளுலகு என்பன. (3) 2771. ஓடும் இருக்கும் கிடக்கும் உடனெழுந்து ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும் பாடும் புறத்தெழும் பல்லுயிர் ஆனந்தம் கூடும் பொழுதிற் குறிப்பிவை தானன்றே. (ப. இ.) திருவருளால் பலவுயிர்களுக்கும் சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கைகூடும். அது கைகூடிய காலத்து அவ்வின்பம் அருட்கதிராய்ப் புறத்துப் பொசியும். அந்நிலையில் அவ்வுயிர்களின் செய்கைகளை அளவிட்டுக் கூறுதல் முடியாது. எனினும் வருமாறுள்ள குறிப்புக்களால் அவ்வுண்மை புலனாகும். அவ்வுயிர் ஓடும்; இருக்கும்; கிடக்கும்; உடனே எழுந்து ஆடும். வேண்டுமேல் பறக்கவும் செய்யும். இருந்த இடத்தில் இருந்துகொண்டே எல்லையின்றிப் பரந்த உலகங்களின் செய்திகளையெல்லாம் ஒன்றொழியாமல் உரைக்கும். பண்ணொடு பொருந்தப் பாடும் இவையனைத்தும் தற்செயலற்ற நற்றவத்தோர் நற்செயலாகும். இவ்வுண்மை வரும் திருவுந்தியாரானறிக: "நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன் தன்செயல் தானேயென் றுந்தீபற தன்னையே தந்தானென் றுந்தீபற." (6) (4) 2772. மிக்கா ரமுதுண் ணநஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறி யேசென்று புக்கா லருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார் கழல்வழி நாடுமின் நீவிரே. (ப. இ.) நல்வினைப்பயன் மிக்காராகிய தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு அவர்கள் முன்பு தன்னை (சிவனை) மறந்த தீவினைப் பயனாம்
1. சிவன்முதலே. திருக்களிற்றுப்படியார், 64. " தேசமிடங். சிவஞானசித்தியார், 8. 2 - 23. " சலமிலனாய். "10. 2 - 2.
|