1235
 

(ப. இ.) கரும்பாகிய உண்டலும் தேனாகிய உறங்கலும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும் சரக்குநிறை காயப்பையாகிய இவ்வுடம்பகத்து முளையும் கிழங்கும்போன்று தோன்றுதலும் நிலைத்தலும் போன்றுள்ள நிலையிலாச் சிற்றின்பத்தினை உள்ளம் விரும்பி நுகர்ந்தது. அவ்வுள்ளம் அவ்வின்பங்கள் நிலையா என அருளால் வெளிப்படக் கண்டது. கண்டதும் கரும்பாகிய உண்டலினும் தேனாகிய உறங்கலினும் உள்ளம் செல்லவில்லை. உள்ளம் வலிய ஆண்டுகொண்ட வள்ளலிடமே ஓவாது செல்லுகின்றது.

(அ. சி.) கரும்பும் தேனும் - உண்டலும் உறங்கலும். அரும்பும் கந்தமும் - தோன்றுதலும் நிலைத்தலும். வெளியுறக் கண்டபின் நன்றாய் அனுபவித்த பின். கரும். . . . . . . . புளித்ததே - உண்டலும் உறங்கலும் ஒழிந்தன.

(19)

2936. உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாஞ் சிவமாகக் காண்டலாற்
கைவள மின்றிக் கருக்கடந் 1தேனன்றே.

(ப. இ.) என்றும் உள்ளதாய் நின்று பயன் அருளுவதாய் உள்ள 'சீலம், நோன்பு, செறிவு, அறிவு' என்னும் நன்னெறி நான்மையின் வாயிலாக (2615) அடியேனைப் பயிற்றுவித்து அவற்றினின்று மீட்டுவித்தருளினன். பின்பு வள்ளலாகிய சிவபெருமான் தன் திருவடியின்பத்தினை உண்பித்தருளினன். அவனருளால் அச்சிறப்பினைப் பாடிக்கொண்டிருக்கின்றேன். பாடுதல் என்பது படர்தலும் பாடலும் ஆடலும் ஆகிய முத்திற வினைகளும் நத்தும் அவனடிக்கே ஆக்குவித்து அன்பின் விளைவாம் இன்பமொன்றே துய்த்துக்கொண்டிருத்தல். ஆண்டான் கருவியாகப்பூண்ட அடியேன் வாயிலாக ஈண்டு நிகழ்த்தப்பெறும் செயலெல்லாம் சிவச் செயலெனவும், காண்பனவெல்லாம் உள்ளுறையும் அவன் திருவருளெனவும் உணர்வின்கண் உணர்த்திக் கண்டுகொண்டிருக்கப் பணித்தருளினன். எஞ்சுவினையாகிய கைவளம் எரிசேர் வித்தென மாய்ந்தமையானும், ஏறுவினை 'உணக்கிலா வித்தென' ஓய்ந்தமை யானும், ஏன்றவினை உடலூழாய்த் தேய்ந்தமையானும் இன்னமோர் அன்னைவயிற்றில் புக்குப் பின்னைப் பேதுறுவிக்கும் கருநிலை கடந்து அருநிலையாம் சிவனிலை எய்தினேன்.

(20)

2937. மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் றகளிநெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி
மாண்டா னொருவன்கை வந்தது 2தானன்றே.


1. அயன் தலை. 8. திருப்பொற் சுண்ணம், 18.

" பாட. " ஆனந்தாதீதம், 100.

" குலம் பாடிக். " திருத்தெள்ளேணம், 20.

" பிணக்கிலாத. " திருத்கழுக்குன்றப் பதிகம், 1.

2. ஒளிக்கு. கொடிக்கவி, 1.

" மீண்டார். 8. திருக்கோவையார், 244.