115
 

அடியேன் அன்பில் இன்னவண்ணம் என்று சொல்லவாராத அளவிலா வண்ணமாய் எழுந்தருளி நின்றனன்.

(அ. சி.) தேன் ஒரு பால் திகழ் - ஒரு பக்கத்தில் விளங்குகின்ற உமாதேவியை உடைய.

(6)

263. முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்1தன் அகலிடத் தானே.

(ப. இ.) ஆருயிர்கள் உய்யும் பொருட்டுப் பேரருளால் உலகுடல் ஊண் முதலியவற்றைச் சிவபெருமான் தன் வைப்பாற்றலாகிய மாயையினின்றும் படைத்தனன். அதன்கண் அவ்வுயிர்க்குப் பற்றுவருமாறு மால் கொடுத்து அவ்வுயிரை அதில் அடைத்தனன். அதன் வாயிலாகச் சிறிது இன்பமும் வழங்கினன். அப்படிப் படைத்தருளிய முதல்வனிடத்து அன்பினை முழுதுமாக அடைத்து எம்பெருமானை அவனருளால் அறிகின்றிலர். பலவாக விரிந்த நிலையாத இந்தப் பெரிய உலக வாழ்வில் அவை நிலையுள்ளன எனக்கொண்டு மயங்குகின்றனர். அதன் மாட்டு மிகவும் உறுதிகொண்டு அன்பு கொள்ளுகின்றனர். இவையனைத்தும் சிவபெருமான் பெருநிறைவில் அருளால் நிகழ்வனவாகும்.

(அ. சி.) வன்பு அடைத்து - உறுதி செலுத்தி.

(7)

264. கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

(ப. இ.) அன்பர் கருத்துக்குப் பொருந்துமாறு மாற்றுயர்ந்த செம்பொன்னா லமைக்கப்பெற்ற பொலிவு மிக்க இயற்கை உண்மைப் பேரொளிப் பிழம்பு சிவன். அப் பிழம்பை அருளால் இடையறா நினைவால் உள்ளத்து இருக்கச் செய்யுங்கள். அதுவே பொருளாக வைத்தும் முழு முதற் சிவனாம். இறைவனை ஏத்துங்கள். அச் சிவனைப் பேரன்பாம் காதலால் அருள்வேண்டித் தொழுங்கள். அங்ஙனம் தொழுதால் சிவவுலகத் தலைவனாகிய அவன் திருவடிப்பேற்றின்பமாகிய விருத்தியைக் கொடுத்தருள்வன்.

(அ. சி.) அருத்தி - அன்பு. விருத்தி - இன்பம்.

(8)

265. நித்தலுந் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்2
வைத்த பரிசறிந் தேயு மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே.


1. அன்போ. திருக்குறள், 73.

" கால்கொடுத். அப்பர், 4. 33 - 4.

2. தோற்றமுண்டேல். ஆரூரர், 7. 7 - 2.