வாய்க் கோதிலா அமுதாய் ஊறிப் பெருகும். அப் பெருக்கின் நிலைக்களம் சிவபெருமானாவன். அதனால் சிவக்கேணியினின்றும் பெருகுவது என ஓதினர். பசும்பொன் போன்று திகழ்ந்து விரிந்து விளங்கும் திருச்சடையின்மீது செங்கழுநீர் மலரும் மணமுங் கலந்து பிரிப்பின்றி இரு பொருளும் கெடாது இருப்பும் இருப்பதுமாய் இருப்பதுபோல் சிவனும் அடிமையும் கூடி நிற்பர். குசும்பம் : செந்துருக்கம்; ஈண்டுச் செங்கழுநீர். (அ. சி.) விசும்பொன்று தாங்கிய - விரிந்த. (8) 2776. முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் கொத்தும் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம் ஒத்துயர் அண்டத் துள்ளமர் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரன்றே. (ப. இ.) முத்தும், வயிரமும், முந்நீர்ப் பவழக் கொத்தும், பசும் பொன்னும், தூவொளி மாணிக்கமும், அவ்வவற்றின் ஒளியும் வேறு பிரிக்கப்படாமை போன்று சிவபெருமானும் எல்லா அண்டங்களினும் பிரிக்கப்படாத பேரொளியாய் நின்றருள்கின்றனன். அதனால் அவன் உள்ளமர் சோதியாகின்றான். அங்ஙனம் கூறுவதல்லாமல் வேறு எங்ஙனம் பிரித்துக் கூறமுடியும்; சொல்லுவீராக. (9) 2777. நானென்றுந் தானென்றும் நாடினேன் நாடலும் நானென்றுந் தானென் றிரண்டில்லை யென்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந் 1தேனன்றே. (ப. இ.) ஒட்டி நின்று உணரும் ஒன்றனை விட்டு எட்டி நின்றுணர்வது என்றும் இயையாத தொன்றாகும். தேனின் சுவையினைத் தேனும் நாவும் உள்ளமும் உயிரும் ஒட்டிநின்றே உணர்தல் வேண்டும். விட்டு எட்டி நின்றால் ஒருகாலமும் உணர ஒண்ணாது. அப்படி ஒட்டி நிற்பதால் இரு பொருளும் ஒரு பொருளாகிவிடாது. அதுபோலவேதான் ஆருயிராகிய அடிமையும் பேருயிராகிய ஆண்டானும் புணர்ப்பால் ஒன்றுபட்டுத் திகழ்வதன்றிப் பொருள் ஒன்றாவதில்லை. ஆயின் திருவருளால் நானென்றும் தானென்றும் நாடினேன். நாடுதலும் நானென்றும் தானென்றும் வேறுபட்டு இரண்டாகக் காண்பதற்கு இல்லையென்னும் மெய்ம்மையினைச் சிவபெருமான் உணர்த்தியருளினன். நானென்ற வுணர்வினை முன்னம் நடப்பாற்றல் வழியாக நல்கிய சிவபெருமானே இப்பொழுது வனப்பாற்றல் வழியாக நானென்னும் எண்ணம் அகலுமாறு செய்தருளினன். ஒருவர் படிக்கத் துவங்குவதன் முன்னம் தாம் படித்தல் வேண்டும் என்னும் நினைப்பும் சொல்லும் அவர்பால் நிகழக் காண்கின்றோம். ஆனால் படிக்கத் துவங்கியதும் அவ் விரண்டினையும் அறவே மறந்து விடுகின்றனர். தன்னையும் மறந்து விடுகின்றனர். படிப்பே தாமாக நிற்கின்றனர். அப்படி நிற்பினும் படிப்பும் அவரும் இரு
1. நானவனென். சிவஞானபோதம், 10. 1 - 1. 2. நானாரென். 8. திருக்கோத்தும்பி, 2.
|