119
 

முத்தியினைக் கொடுத்து அவர்கட்கு முன்நின்றருள்வன் சித்தர்கள் தன்முனைப்பு அறாதவர்கள். பத்தர்கள் - தன்முனைப்பு அற்றவர்கள். முன்புநிற்றல் - மேலோங்கி விளங்கல். அஃதாவது திருவெண்ணீறு அணிந்தார் திருமேனிக்கண் அத் திருவெண்ணீறு மேலோங்கி விளங்குவது போன்றாகும். சித்தர் : இவர் சித்தருள் ஒருவகையினர்.

(5)

272. கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

(ப. இ.) மணங் கமழ்கின்ற கொன்றைமாலையினைக் கண்ணையும் தாருமாகக் கொண்டருளிய சிவபெருமான் திருவடியிணையினை நிறைந்த பேரன்பால் கண்டுகொண்டேன் ஆணவச் சார்பாம் மாயையின் மருள் யானை எனப்படும் அவ்வியானையினை ஈர்ந்து அதன் தோலினைப் போர்த்து அடக்கியருளியவன் சிவபெருமான். அவனுடைய கழலிணையைக் கண்டுகொண்டேன். அன்பர் நெஞ்சத் தாமரையின்கண் உறையும் அவன் திருவடியைக் கண்டுகொண்டேன். திருவடியுணர்வாம் அன்பினகத்து அவன் கழலிணையினைக் கண்டுகொண்டேன். இதன்கண் முறையே சீலம், நோன்பு, செறிவு அறிவென்னும் நானெறிப் பேறும் குறிக்கப் பெற்றவாறு காண்க.

(அ. சி.) கமலமலர் உறைவான் - மலர்மிசை ஏகினான்.

(6)

273. நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.

(ப. இ.) நம்புவார்க்குப் புகலிடமாகிய நம்பனை, எல்லாமாய்க் கலந்திருக்குந் தன்மையால் பலவகையான பொருளும் ஆவன் என்று மேலிடத்துள்ள வானவர்களால் ஓதப்படும் முதல்வனை, இயற்கை உண்மை அறிவின்ப வடிவாயவனை, ஆருயிர்கட்கு அவ்வின்பத் திடமாக நின்று இனிப்பூட்டும் அன்புருவனை, அவன்மாட்டு அன்பு வைத்தார் அவனருளால் அறிவர். ஏனையார் அறியமாட்டார்.

(அ. சி.) இன்பனை - ஆனந்தமயனை. இரதிக்கும் - தித்திக்கும்.

(7)

274. முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பி லவனை அறியகி லாரே.

(ப. இ.) தம் எதிரே நாளும் நடந்து கொண்டிருக்கும் பிறப்பும் இறப்பும் ஆகிய இரண்டின் உண்மையினை யறியாதார் அன்பினிடத்தும் காணப்படும் இன்ப வடிவினனாகிய இறைவனை