(அ. சி.) பதுங்கிய.......காதம் - பன்னிரண்டங்குலம் பரிந்திடும் பிராணன். ஓது . . . . . . உலவ - சிவானந்தக் கடலின் உணர்ச்சி தோன்ற நாலங்குலம் கூடிக்கொளின். மது . . . . . . ஊற - தேன் துளிக்கும் சிவக்கனியின் இன்பம் பெருக. பொது......வளைத்தான் - இதுவரை வருத்திய ஐந்து இந்திரியங்களை வென்றவன் ஆவன். (48) 2874. தோணியொன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு வாணிபஞ் செய்து வழங்கி வளர்மகன் நீலிக் கிறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து ஆலிப் பழம்போல் அளிக்கின்ற 1அப்பன்றே. (ப. இ.) பிறவிப் பெருங்கடலிலே மிதந்து கரை ஏறும்படி சிவனருளால் தரப்பட்ட அறிவித்தோணி இவ்வாறறிவுசேர் ஏறனைய சீருடல். இதன்கண் ஆருயிர்கள் ஏறித்தொடர்ந்து வினைக்கீடாகப் பிறந்தும் இறந்தும் இக்கரையும் அக்கரையுமாக அலைகின்றன. காலினும் கலத்தினும் வாணிகம் புரிவது நூலின் வழிவந்தார் நுண்செயலாகும். அதுபோல் நூன்முறையும் கோன்முறையும் கைக்கொண்டு மறப்பினைக் கொடுத்தும் நினைபபினைக் கொண்டும் பண்டமாற்றுதலாகிய கொண்டு விலையினைச் செய்து வளர்ந்துவருமகன், நீலியாகிய மாயாகாரியப் பொருள்களினிடத்துத் தினையினும் சிறிதளவாகவேனும் பற்றுள்ளம் கொள்ளுதல் ஆகாது. கொள்ளின் நிலைதளரும். நிலைதளரின் 'தலையினிழிந்த மயிரனையராவர்.' சலிக்குந் தன்மைவாய்ந்தது நீர். அதனால் அது சலம் எனப்பட்டது. சலம், தமிழ்ச் சொல.் அலைதல் - ஓய்வின்றி எழுந்து மடங்கிவருதல். அதனால் அலை நீரின் உறப்பாயிற்று. பசை போன்று அப்புதலால் அப்பென்பதும் தண்ணீருக்குப் பெயராயிற்று. அத்தகைய அப்புப்போன்ற ஓயா அலைவுசேர் எண்ணமாகிய சித்தத்தின்கண் அம் மாயாகாரியப் பொருள்கள். நச்சுக் கனியாகிய ஆலிப்பழம் போன்று அருளால் அகற்றப்படுதல்வேண்டும். அறவி: அறநெறி; அறம். (அ. சி.) தோணி - உடல். கடல் - உலகமாய குடும்பக்கடல். வாணிபம் செய்து - நினைத்தல் மறத்தலாகிய வியாபாரங்களைச் செய்து. வழங்கி - ஒழுகி. நீலிக்கு - பெண்ணின்பொருட்டு. இறையும் - சிறிதேனும். நெஞ்சின் நிலைதளரின் - மனம் நிலைகுலைந்தால். அப்பு - சலிக்கும் தன்மையுள்ள நீரைப்போன்ற மனம். ஆலிப்பழம் - நச்சுக்கனி. (49) 2875. முக்காத மாற்றிலே மூன்றுள வாழைகள் செக்குப் பழுத்த திரிமலங் காய்த்தன பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்கு மலருண்டு நடுவுநின் 2றாரே. (ப. இ.) அமைதி, ஆட்சி, அழுந்தல் என்னும் முக்குணம் விரவிய வழியிலே புக்கு ஓய்வின்றி வழிவழியாய் வருகின்ற வாழைகளாகிய நனவு கனவு உறக்கமென்னும் மூன்றும் நன்னெறிநான்மை நற்றவச் செக்கால் செம்மையுறும். ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் காய்த்துப் பழுத்து வீழ்ந்து அடங்கின திருவருளால் திருவடி
1. மனமெனு. அப்பர், 4. 46 - 2. 2. செம்மலர். சிவஞானபோதம், 12.
|