அழைக்கப்படும். ஆருயிர்கள் அவனை அடைய நாடி மனமாகிய நெடிய தேரேறி ஓடும். ஓடுவதென்பது எல்லையிலா எண்ணத்தை அல்லும் பகலும் ஓயாது எண்ணுதல். அவ் வெண்ணத்தினையே நாடு என நவின்றனர். அவ் வெண்ணத்தினுக்கோர் எல்லை காணாமையால் புலம்புறுவர். இதுவே 'போயின நாடறியாது புலம்புவர்' என்பதாம். தேயமும் நாடும் நேயமிக்கு ஓயாது ஓடிச்சென்று நாடுவர். அடியேனும் புகுவார் பின் புக்குப் பன்னாள் அலைந்தேன். பொன்னான இவ் வுடம்பெனும் நாட்டின்கண் நல்லருளால் நாடிக் கண்டுகொண்டேன். (அ. சி.) மாயனை - மாயையோடு கூடிய சிவபிரானை. போயின நாடு - சங்கற்பத்தின் எல்லை. காயமின்னாட்டிடை - உடம்பினுள். (1) 2941. மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல் இன்னிசை பாட இருந்தவ ராரெனில் முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றேமெய்ப் பாடறி 1வீரன்றே. (ப. இ.) நிலைபெற்ற கைலாயமலை என்று சொல்லப்படும் அகப் புறக்கலனாம் அந்தக் கரணங்களுள், அம் மலைபோல் காணப்படும் மதயானையாகிய உணர்வெழுச்சியில் தோன்றும் தூயமனத்தின்மேல் மெய்யடியார்கள் செந்தமிழ் இன்னிசை வந்தவர் பாட எழுந்தருளி இருந்தவர் யாரெனில் காலமெய்க்குக் காலமாக விளங்கும் காலகாலனாகிய விழுமிய முழுமுதற் சிவபெருமான் என்க. அவர்தம் திருப்பெயராம் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தைப் பலகால் எடுத்து ஓதினர் என்க. அவர்கள் யாரெனில் பெருமைசேர் திருநீலகண்டப் பெருமானாகிய சீகண்டவுருத்திரன், திருநந்திதேவர் முதலியோர் என்க. (அ. சி.) மன்னுமலை - உடம்பு. மதவாரணம் - மனம். கால முதல்வனார் - தத்துவங்களைப் படைத்தவன். பாடு - பெருமை. (2) 2942. முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனைக் காணா தரற்றுகின் றேனையோர் பித்தன் இவனென்று பேசுகின் 2றாரன்றே. (ப. இ.) தென்றலும் தமிழும் என்றும் நின்று நிலவும் தென்கடல் பிறந்த வான்பெரும் முத்தினுள் சிறந்த முத்து ஆணிமுத்து எனப்படும். அம் முத்தினும் சிறந்தவன் சிவபெருமானாவன். ஆருயிர் உள்ளத்தினுள் பேரறிவுப் பேரொளிப்பிழம்பாய்த் தோன்றுபவனும் அவனே. அந் நிலையில் அவன் முகிழிள ஞாயிறெனப்படுவன். அவன் திருவடி
1. வித்தையோ. சிவஞானசித்தியார், 1. 3 - 16. " நங்காயி. 8. திருச்சாழல், 11. " ஆலந். ஆரூரர், 7. 61 - 1. 2. கேட்டாயோ. 8. திருவம்மானை, 6. " அக்கு. அப்பர், 5. 97 - 14. " ஆதி. 12. சம்பந்தர், 429.
|