215
 

லுறும் ஆருயிர், துன்பமாகிய பாசப்பிணிப்பில் கட்டுண்டு வரும். வந்து பிறக்கும்; பிறந்து முறையே வளரும். அங்ஙனம் வளர்ந்தபின் மேலோங்கி வாழ முயலும். அங்ஙனம் முயலும்போது, பழைமையாகிய வினைக்கீடாக வரும் பிறவியினை நாடுதல் வேண்டும். அப்படி நாடித் திருவைந்தெழுத்தை அகங்குழைந்து அன்புடன் இடையறாது ஓதுதல் வேண்டும். பாசம் - மாயை. முன்புற - மேலா இருக்க. தொன்பு : புவ்வீறு பெற்ற பண்புப் பெயர்; பழைமை.

(அ. சி.) தொன்பு - பழமையாகிய பிறவி.

(36)

472. குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்1
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.

(ப. இ.) காக்கைக் கூட்டில் குயில் முட்டையிட அதனை அக்காக்கை சிறிதும் ஐயம் கொள்ளாது அடைகாத்து வெளிப்படுத்துவது போல, இறைவன் ஆவிகளின் வினைக்கீடாக அவ் ஆவிகளை அருவுடலோடு (உளமணுவாய்) உருவுடல் பெறத் தந்தை கருவில் இரண்டு திங்களும் தாய் கருவில் பத்துத் திங்களும் புகுத்தியருளுகின்றனன். அதனால் அனைத்துயிரும் ஆண்டவன் மக்களே. அவ்வுண்மையுணராது பெற்றோர் தம் மக்களே எனத் திரியக் கொள்வது மயக்கத்தால் ஆவது. உண்மையுணர்ந்தார் ஆசான் மாணாக்கரை ஓம்புவதுபோல் தம் மக்களையும் பிறர் மக்களையும் ஏனைச் சிற்றுயிர்களையும் சிவனினைவுடன் ஒப்பப் பேணுவர். அங்ஙனம் பேணின் அதுவே இறைபணியாகும். சிறந்தது பயிற்றலுமாகும். அயிர்ப்பு - ஐயம். சிறந்தது - திருவடிப்பேறு.

(37)

473. முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.

(ப. இ.) முதற் கிழங்காய் - காரணமாகிய வித்தாய். முளைப்பின் - முளைத்த பின்பு. அதற்புதலாய்ப் பலமாய் - அதன் வளர்ச்சியிற் செடியாய் அரும்பு மலர் காய்கனி முதலிய பயனாய். நின்றளிக்கும் - நிலைத்து நின்று கைம்மாறு கருதாது பயனுதவும். அதற்கது போல - ஓரறிவுயிர்கள் பிறவுயிர்கட்குத் தாம் பயன்படுவதே இன்பமாகக் கொள்வது போன்று. அவ் ஓரறிவுயிர்க்கும் சிவபெருமான் இன்பருள்வன். ஆதிப்பிரான் - ஆதியை யுடைய முழுமுதற் சிவபெருமான்.

(அ. சி.) அதன் புதலாய் - அதன் செடியாய்.

(38)

474. பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைக்கடல் உப்புத் திரண்டது2 போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.


1. கண்மூன். நாலடியார். 400.

2. சிவனெனவே. திருக்களிற்றுப்படியார், 11.