270
 

உடல். துளை - நடுநாடி பாசத் துருவிடுமாகில் (பாசத்துத் துருவிடுமாகில்) அன்பினால் தேடுவானாயின், மார்கழி எற்றமதாம் - மார்கழி என்று கூறப்படும் உலகத் தோற்றத் திருவாதிரைத் திருநாள் முதன்மையதாகும்.

(17)

595. முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.

(ப. இ.) முக்குணமும் ஆருயிரை மூடியிருக்கும் மூடுதலினின்றும் அகல, உயிர்ப்பை மூலத்திடத்து முறைப்படச் சிக்கெனப்பிடித்தல் வேண்டும். பின்பு வலப்பால் இடப்பால் நாடிவழியாக மாறிமாறிப் பயிறல்வேண்டும். குறித்தநாழிகை வரை அகத்தே தடுத்தல்வேண்டும். அங்ஙனம் பயில உயிர்நிலையாகிய உடம்பைச் சிவபெருமான் நிலைப்பித்தருள்வன். முக்குண மூடற - அமைதி ஆட்சி அழுந்தல் என்னும் தொழிற்பண்பாம். மூன்றின் மறைப்பும் அகல. சிக்கென - உறுதியாக. திரித்து - மாறிமாறிச் செலுத்தி. நாழிகை - குறித்த நாழிகைவரை. சாதிக்க - அகத்தவம் பயில. உயிர்நிலை - உடல். வானவர்கோன் - சிவபெருமான். வைக்கும் - நிலைப்பிக்கும்.

(18)

596. நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

(ப. இ.) சீர்பெற்ற கொப்பூழுக்கு நான்குவிரல் மேலும், இதழ் விரிந்த வாணியாகிய ஓசைபிறக்கும் இடத்திற்கு இருவிரல் கீழுமாக அலையற்ற கடல்போல் அசைவற்றிருக்கப்பெற்றுச் சிவபெருமானைக் கருதுதல் வேண்டும். அப்பொழுது கருதுவார் சிவனையும் தம்மையும் அறிந்தாராவர். கடலித்து - கடலின்றன்மையாய். நடலித்த: (நடலமென்பதன் அடியாகப் பிறந்த பெயரெச்சம்) சீர்பெற்ற. மடலித்த - இதழ்பொருந்திய. வாணி - ஓசை தோன்றுமிடம்.

(அ. சி.) மடலித்த வாணி - அனாகதம். கடலித்து - அலையற்ற கடல் போல் இருந்து. சடலத் தலைவன் - சீவன்.

(19)

597. அறிவா யசத்தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத் தருளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

(ப. இ.) திருவருளால் மெய்யுணர்வு கைவந்தார் முப்பத்தாறு மெய்களும் நிலையுள்ளனவல்ல என்னும் மெய்ம்மையை யுணர்வர். உணரவே மாயைப் பற்றினின்றும் விலகுவர். தம்மைவிட்டு நீங்காத


1. உணருரு. சிவஞானபோதம், 6.